07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 31, 2010

பிறபல பதிவர்கள்
சினிமா சார்ந்த பதிவர்கள், தொழில்நுட்பம் சார்ந்து பதிவிடுபவர்கள் என தனித்தனியே சொல்லி விட்டேன். இன்று எப்படி வகைப்படுத்துவது என யோசித்து குழம்பியதுதான் மிச்சம். ஆகவே பிற வகைகளை சார்ந்த பல பதிவர்கள் குறித்து இன்று அறியத்தருகிறேன். அதுதான் பிற பல பதிவர்கள்!

குசும்பன்
சிலரிடம் நண்பராய் இருப்பது ஆனந்தமாய் இருக்கும். சிலரிடம் நண்பராய் இருப்பது அவஸ்தையாய் இருக்கும். ஆனால் இவரிடம் நண்பராய் இருப்பவர்களுக்கு ஆனந்த அவஸ்தைதான். இவர் தனது பதிவுலக நண்பர்களை எல்லாம் அடிக்கடி கதற கதற கார்டூனாக்குபவர். தெளிவான இலக்குடன் இவர் அடிக்கும் அரசியல், சினிமா கமெண்ட்ஸ் சிரிக்க மட்டும் அல்லாமல் ரொம்பவும் சிந்திக்கவும் வைக்கும்.

எம்.எம்.அப்துல்லா
குசும்பன் போன்ற ஒருவர் உலகில் அவதரித்தால் அவருக்கு ஈடு கொடுக்க இன்னொருவரும் அவதரித்திருப்பார். அப்படிப்பட்டவர்தான் பதிவர் எம்.எம்.அப்துல்லா. ஒண்ணுமில்லை சும்மா என தளத்திற்கு பெயரை வைத்துக்கொண்டு கலந்து கட்டி எல்லாவற்றையும் பற்றி எழுதும் இவரின் பதிவுகள் மென் வாசிப்பு மனோ வசிய வகையை சார்ந்தவை. (அப்படின்னா என்னன்னு கேட்காதீங்க.. புதுபுது வார்த்தையை அடிச்சி விட்டாதான் வர வர பதிவர்னே ஒத்துக்கிறாங்க.. அதான்....) . இவரது நகைச்சுவை பதிவுகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.


பிரியமுடன் வசந்த்
புதுசு புதுசாய் திணுசு திணுசாய் யோசிப்பதில் பிரியமுடன் வசந்த்தை அடிச்சிக்க முடியாது. ஏதாவது ஒரு வித்யாசமான வடிவத்தில் பதிவுகள் வந்து கொண்டே இருக்கும். அதிகமாக டிசைன் செய்வதிலும் கலர்ஃபுல்லாக பதிவுகளை விஷுவல் ட்ரீட்டாக கொடுப்பதிலும் இவருக்கு தணியாத ஆர்வம்.

கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா
நீங்கள் சாதாரணமாய் பார்க்கில் வாக்கிங் போய்க்கொண்டிருக்கிறீர்கள். இன்னொரு நண்பர் ஓடியபடி ஜாக்கிங் போய்க்கொண்டிருக்கிறார்.  அவருடன் பேச நீங்களும் ஓடித்தான் ஆகவேண்டும். பேசி முடித்தபின் நின்று மூச்சு வாங்குவீர்கள் அல்லவா... பதிவர் சித்ரா அவர்களின் பதிவுகளை படிக்கும்பொழுது எனக்கும் இதே போன்றதொரு உணர்வு வரும். பதிவுகளில் எக்ஸ்ட்ரா செட்டிங்க்ஸ் எதுவும் இல்லாமல் அனிச்சையாய் மனதில் பட்டதை கட கடவென சொல்பவர். இவரிடம் ஆச்சரியப்படத்தக்க விஷயம் ஒன்று உண்டு.... தான் படிக்கும் எல்லா பதிவுகளுக்கும் தவறாமல் பின்னூட்டம் கொடுத்து விடுவார்.

ராஜு
பதிவர் ராஜு அவர்களின் தளத்தில் கொட்டிக்கிடக்கும் கற்பனை கலந்துரையாடல் பதிவுகளை படித்து பாருங்கள்.  மனது லேசாகி எந்த வேலையையும் வயலண்ட் ஆகாமல் சைலண்ட்டாக செய்து முடிப்பீர்கள்.

கார்க்கி
தோழி அப்டேட்ஸ் என தினமும் டிவிட்டரிலும் அடிக்கடி பதிவுலகிலும் இவர் கொடுக்கும் சின்னஞ்சிறிய காதல் கவிதைகளுக்கு நான் ரசிகன். ஒரே தலைப்பில் எப்படி இவ்வளவு விதம் விதமாக கொடுக்கிறார் என தினமும் ஆச்சரியப்படுகிறேன். 

லோஷன்
கிரிக்கெட், கால்பந்து ரசிகரா நீங்கள். நீங்கள் உடனே புக்மார்க் செய்து கொள்ள வேண்டிய தளம் பதிவர் லோஷன் அவர்கள் நடத்தும் இத்தளம். மிகச்சிறப்பான விளையாட்டு விமர்சனங்களை முன்வைப்பவர். கடந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளுக்கான இவருடைய பதிவுகள் என் பேவரைட்.அன்புடன்
சுகுமார் சுவாமிநாதன் - வலைமனை

9 comments:

 1. பதிவுகல், பிறபல பதிவர்கள்னு சொல்விளையாட்டு நன்று.

  ReplyDelete
 2. சூப்பரு! எல்லாப் பதிவுகளையும் படிச்சிட வேண்டியது தான்! நன்றித் தலைவா!

  ReplyDelete
 3. All are popular in their own way!! Thanks Sukumar for your good work for the whole week.

  ReplyDelete
 4. ரிக்ஹ்டு எல்லாருமே அருமையான பதிவர்கள் ..சுப்பர்

  ReplyDelete
 5. அறிமுகத்துக்கு நன்றி சுகுமார்ஜி!

  :))

  ReplyDelete
 6. அய் .... நானும் பிற பல பதிவரா????? ஜூப்பரு! நன்றிங்கோ!

  ReplyDelete
 7. அறிந்த முகங்களின் அறிமுகங்கள் அருமை..............

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது