07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 5, 2010

ஸ்மைலோஸ்கோப்

எனக்குப் பொதுவாகவே அவார்ட் படங்கள்/அழுகை காவியங்கள் அவ்வளவாகப் பிடிக்காது. தியேட்டர் போய் உட்கார்ந்தால் கவலை மறந்து மூன்று மணி நேரம் சிரித்துவிட்டு வர வேண்டும். பதிவெழுத மேட்டர் தரும் கற்பக விருட்சம் நம் தமிழ் சினிமா. இன்று சினிமாவை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நையாண்டிப் பதிவுகள் சிலவற்றைப் பார்ப்போம்.

இது அனுபவப் பகிர்வுதானென்றாலும், மெயின் பிக்சரையும் இதையும் கம்பேர் பண்ணி பார்க்கும்போது வெடிச்சிரிப்பு வருவது தவிர்க்க இயலாது.

சின்னப்பையனோட இந்தப் பதிவுல வர்ற நடிகர்கள் யாருன்னு கண்டுபிடிக்கவே முடியாது. அம்புட்டு கஸ்டம்:)

பேரரசுவையே பேட்டிக் கண்ட மாவீரர் இவரு. கிட்டப் பார்த்தும் பயந்துடாம பேட்டில பேரரசு உதிர்த்த முத்துகளையெல்லாம் மாலையா கட்டிக் கொடுத்திருக்காரு. படிங்க. சிரிங்க.

இது Spoof வகையறா. வெட்டிப்பயல் பாலாஜியோட நகைச்சுவை உணர்வுக்கு கோழியின் அட்டகாசங்களும், டெவில் ஷோவுமே போதும். உன்னைப் போல ஒருவன்ல விஜய் நடிச்சிருந்தார்னா. படிச்சி மட்டும் பாருங்க. கற்பனை பண்ணி பார்த்து ஏதாவது ஆச்சுன்னா கம்பேனி பொறுப்பேத்துக்காது.

நம்ம தமிழ் சினிமா பிரபலங்கள் ப்லாக் ஆரம்பிச்சா? சந்தானத்தோட கவுண்டர் டயலாக்ஸோட. இணையத்துல அதிகம் டேமேஜ் ஆகிற ஹீரோக்களில் விஜய்க்கு முதலிடம் கொடுக்கலாம்:)

இது விஜயகாந்தின் ஆக்‌ஷன் படம். கேப்டனின் ஆஸ்கர் முயற்சி. கைக்கெட்டியதா எனத் தெரியவில்லை:))

இவர்களோடு என்னுடைய பங்கிற்கு

அரியர்ஸ் பையன்

விண்வெளியில் விசயகாந்த்

மதராசபட்டிணம் - மாறுபட்ட கோணத்தில்

14 comments:

 1. நல்ல அறிமுகங்கள்! நன்றி!

  ReplyDelete
 2. சூப்பர் வித்யா.... ஆரம்பமே படு ஜோர். உள்ளே.....உள்ளே..... ஆனா உரிச்சி பாத்தா வெங்காயம் மாதிரி இல்லாம மேட்டரா கீது........கலக்குங்க......

  ReplyDelete
 3. நல்ல அறிமுகங்கள்

  வாழ்த்துக்கள் சகோ

  விஜய்

  ReplyDelete
 4. பலரும் காமெடி எக்ஸ்பர்ட்ஸ். இந்த போர்ஷன் எனக்கு மிகவும் பிடித்தமானது ஆகையால் எனக்குப் புதிதான அறிமுகங்கள் சிலரையும் ஃபாலோ செய்யத்துவங்குகிறேன், நன்றி.

  ReplyDelete
 5. வித்யா உங்களோட அமிர்கானுக்கு டஃப் பைட் கொடுத்த நடிகர் பதிவு தான் நான் முதல்ல படிச்ச பதிவு :)))அதை விட்டுட்டீங்களே

  ReplyDelete
 6. நல்ல அறிமுகங்கள்

  ReplyDelete
 7. //வித்யா உங்களோட அமிர்கானுக்கு டஃப் பைட் கொடுத்த நடிகர் பதிவு தான் நான் முதல்ல படிச்ச பதிவு :)))அதை விட்டுட்டீங்களே//


  வழிபொழிகிறேன்.. விஜயகாந்தை நக்கலடித்து வந்த உங்களின் ஒரு பதிவுதான் என்னை பதிவுலகம் இழுத்துக்கொண்டு வந்துவிட்டது. வரையரைக்கு அடங்காத அசாத்தியாமான எழுத்துனடை உங்களின் ப்ளஸ்பாய்ண்ட்,.. தொடர்ந்து எழுதுங்கள்,..

  ReplyDelete
 8. சினிமாஸ் ஸ்பெஷலா அதுவும் நீங்க செல்லும் விதமே சூப்பரா இருக்குமே :-)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது