07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 26, 2010

பல்லு வௌக்கும் முன்னர் படிக்கும் பதிவர்கள்

வலைச்சரத்தில் இரண்டாம் நாளான இன்று நான் தவற விடாமல் தொடர்ந்து படிக்கும் பதிவர்கள் குறித்தும் அவர்களிடம் எனக்கு பிடித்த பதிவுகள் குறித்தும் அறிமுகப்படுத்துகிறேன்.  காலையில் எழுந்தவுடன் இவர்கள் ஏதாவது பதிவு போட்டிருக்கிறார்களா என பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலையே. இவர்களை தொடர்ந்து படிக்கும்பொழுதில் அவர்களுடனே நாம் ஒரு ஹாஸ்டல் ரூம் மேட் போல் வாழும் உணர்வு கிடைக்கிறது.  ஆனால் இது அவர்களுக்கே தெரியாது. வலையுலகில் மட்டுமே சாத்தியப்படக்கூடிய விசித்திரமான நட்பு !


கேபிள் சங்கர்
போஸ்டர் கூட ஒட்டாத பட்ஜெட் படங்களை கூட தேடிப் பிடித்து பார்த்து நிறை குறைகளை அலசுவதில் இவருக்கு நிகர் நிகரே. சினிமாவிற்கு அடுத்தபடியாக அவ்வப்போது எழும் சமூக பிரச்சனை மற்றும் நுகர்வோர் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு பதிவுகளையும், தான் ரசித்த சாப்பாட்டு கடைகள் குறித்தும், பயண அனுபவங்கள் குறித்தும் சுவையாக பகிர்பவர்.


ஜாக்கி சேகர்
நம் குடும்பத்துள் ஒருவரை போன்ற உணர்வினை தரக்கூடிய பதிவுகளை தருவது இவருடைய ஸ்பெஷாலிட்டி. தான் பார்த்து ரசித்த பிற மொழி படங்கள் பலவற்றை தரம் பிரித்து நமக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இவரது நோஸ்டால்ஜியா வகை பதிவுகள் பல அருமையான டாபிக்குகளில் இவரது வலைப்பூவில் கொட்டிக்கிடக்கின்றது. ஒரு சென்னைவாசியாய் சென்னையின் நிறை குறைகளை சுவைபட இவர் சொல்வது அழகு.


ஆதிமூலகிருஷ்ணன்
வாழ்வதற்கான முதல் காரணம் ரசனை என ஒரு ரசிகனாக தன்னை முன்னிறுத்திக்கொள்ள விரும்பும் இவரது பதிவுகள், நம் வாழ்வில் காண்பனவற்றின் அழகான பிரதிபலிப்பாக இருக்கும். ஆஹா.. இப்படியும் ரசனையாக சொல்ல முடியுமா என ஆச்சரியங்களை ஏற்படுத்துபவர்.


பரிசல்காரன்
நிகழ்வுகளை சொல்வதை நகைச்சுவையாகவும் சிம்பிளாகவும் கிரியேட்டிவிட்டியாகவும் சொல்ல முடியுமா.. இவரால் முடியும்.  வார்த்தைகளோடு இவர் விளையாடுவது எப்பொழுதுமே எனக்கு ஆச்சரியம்தான்.  அன்றாட நிகழ்வுகளை அழகாக தொகுக்கும் இவரது டைரிக்குறிப்பு ஸ்டைல் பதிவுகளை ஒருமுறை படித்தாலே இவருக்கு விசிறியாகிவிடுவோம்.

உண்மைத்தமிழன்
சினிமா உலகினர், அரசியல் உலகினர் கூட அறிந்திராத தகவல்களை திரட்டி சம்பந்தப்பட்ட கவர் ஸ்டோரியோடு விரிவாய் தருவதில் இவர் வல்லவர். 

சரவணகுமரன்
சுவாரஸ்யமான கட்டுரைகள் இவர் வலைப்பூ எங்கும் நிறைந்திருக்கிறது, நிகழ்வுகளை மென்மையாய் மெல்லிய நகைச்சுவை இழையோட தருபவர். 


எம்.எஸ்.வி. முத்து
அறிவியல் சார்ந்த கட்டுரைகள், சமூக அக்கறை கொண்ட பதிவுகள் நிறைந்தது எம்.எஸ்.வி முத்து அவர்களின் குரல்வலை. இவரது திகில் கதைகளுக்கு ரசிகன் நான்.


நாளை தொடர்கிறேன்..

26 comments:

 1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

  ReplyDelete
 2. நல்லாயிருக்குங்க...

  ReplyDelete
 3. நானும் உங்களைப் போலத்தான் ......

  ReplyDelete
 4. நன்றி சுகுமார் சுவாமிநாதன்..தலைப்பு ரொம்ப நல்லா இருந்தது.. ரொம்ப கேச்சியாவும் இருந்துச்சி...

  இத்தனை பேர் அசத்தும் இந்த அறிமுகத்தில் எனது பெயரும் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி...

  பிரியங்களுடன்
  ஜாக்கிசேகர்.

  ReplyDelete
 5. அருமையாய் வரிசைப்படுத்தி இருக்கிறீர்கள்,ஒரு ஆச்சரிய தற்செயல் ஒற்றுமை வர்கள் அலாஸ்கா ரேங்க்கிங் நீங்கள் வரிசைப்படுத்திய வரிசைக்கிரமத்திலேயே அமைந்தது.ஃபாலோயர் எண்ணீக்கை கொஞ்சம் முன்னே பின்னே அகிடுச்சு,வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. நன்றி சுகுமார். பெருமை செய்திருக்கிறீர்கள்.

  சிலைட் பண்றத சொல்லிக்கொடுக்கவே மாட்டீங்கள்ல.. ஒரு நாள் வச்சுக்கறேன்.!

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் நண்பா

  பிரபல பதிவர்களை அறிமுகப்படுத்துவதை விட புதிய பதிவர்களை அறிமுகம் செய்தால் உபயோகமாக இருக்கும்

  விஜய்

  ReplyDelete
 8. அறிமுகத்திற்கு மிக்க நன்றி தம்பி..!

  ReplyDelete
 9. சுகுமார்...

  நன்றி சொன்னா திட்டுவீங்களே... என்ன பண்றது??

  ReplyDelete
 10. எனக்கும் பிடித்த பலர் உங்கள் பதிவில் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

  ReplyDelete
 11. அறிமுகங்களுக்கு நன்றி!
  (எல்லாமே அறிந்தவைதான் என்றாலும் அவற்றின் சிறப்பை மேலும் எடுத்துரைத்தீர்கள்!)

  ReplyDelete
 12. ரொம்ப ரொம்ப நன்றி, சுகுமார்... :-)

  ReplyDelete
 13. அடுத்து என்ன தலைப்பு’ன்னு யோசிச்சு பார்த்தா பயமா இருக்கே! :-)

  ReplyDelete
 14. // ம.தி.சுதா //

  மிக்க நன்றி...

  ReplyDelete
 15. //கலாநேசன் //
  மகிழ்ச்சி...

  ReplyDelete
 16. // ஜாக்கி சேகர் //
  நன்றி பாஸ்..

  ReplyDelete
 17. // சி.பி.செந்திலகுமார் //
  நன்றிங்க..

  ReplyDelete
 18. நன்றிங்க மதுரை சரவணன்..

  ReplyDelete
 19. // ஆதிமூலக்கிருஷ்ணன் //
  நன்றி சார்... நான் சொல்லித்தரன்னு சொல்லிட்டேன்.. நீங்கதான் வரலை,,... இது செல்லாது செல்லாது..

  ReplyDelete
 20. // விஜய் //
  நன்றி சார் உங்கள் கருத்துக்கு

  ReplyDelete
 21. //உண்மைத்தமிழன் //

  நன்றி தல

  ReplyDelete
 22. // Dr.எம்.கே,முருகானந்தன்//
  மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
 23. //எஸ்.கே //
  நன்றி பாஸ்

  ReplyDelete
 24. // சரவணகுமரன் //
  ஹா ஹா... விழுந்து விழுந்து சிரிக்கிறேன்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது