07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 12, 2010

யமராஜனுக்கே டஃப் கொடுத்தவர்கள்

கவலையோடு அமர்ந்திருந்த யமனை குறித்து யமி அசைந்து வந்து கொண்டிருந்தாள். இதேதுடா புது பிரச்சினை என்று யமன் யோசிக்கும் முன்பே, யமி தனது பிளாக்பெரி 9000 மாடல் போனில் பேசிக்கொண்டே வந்து கண்ணாலேயே எழுந்திரு என்பது போல சைகை செய்தாள்.

"எப்போதுமே பேசப்படாத மெல்லிய நுண்ணுணர்வுகளைப் பேசும் கவிதைகள் எனக்கு விருப்பமாயிருக்கின்றன." என்று யாரிடமோ பேசிக்கொண்டிருந்தாள்.

"......"

"சின்னச் சின்ன உணர்வு முடிச்சுக்களை அடையாளங் கண்டு எழுத்தில் வடிப்பது கொஞ்சம் நிறையவே சிரமம்தான். அப்படி மலரினும் மெல்லிய உணர்வுகளைப் பேசும் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை." என்றாள் யமி.

"....."

"ஆஹா பிரமாதம் கொன்னுட்டீங்க போங்க" என்று சொல்லிய படியே யமனின் முதுகில் பொளேரென்று சாத்துகிறாள். "இப்போ நான் படிச்ச ஒன்றை சொல்றேன் பாருங்க"

வாழைப்பழத் தோலை
இந்தா என நீட்டி
அருகில் வரும் மாடுகளை
வகையாய் அடிக்கிறது நமது கம்பு.

சாப்பிட முடியாத அளவுக்குக்
கெட்டுப் போன பிறகே
ஞாபகம் வருகின்றன நாய்கள்.


என்றபடியே யமனைப் பார்க்கிறாள். யமன் சமையல் கட்டை நோக்கி ஓடுகிறார். அங்கே...


இரவின் நிழலாய்
நீள்கிறது விழிப்பு.
கதவுகளற்ற
யன்னல் கம்பிகளினூடே
ஒளிரும் விழிகளுடன்
கரும் பூனை ஒன்று
பாய்ந்து மறைகிறது.


கண்கள் கலங்கியது யமனுக்கு. தான் காதலித்து தொலைத்த நாட்களையே எண்ணிப் பார்க்கிறார்.

"யமி... யவ்ளோ romantic-ஆ இருந்தேடி நீ.. " என்று பொலம்பினபடியே ரொட்டிய சுட்டுப் போட்டுக் கொண்டே தான் ஒரு காலத்தில் சுட்டுப் போட்டக் கவிதையை மீண்டும் மனசுக்குள்ளே மறு ஒலிபரப்பு செஞ்சு முணுமுணுக்கிறார்.

"அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம்.
சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள்.
கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள்.
அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது அவளருகில் போய் கேட்டேன்
‘என்னக் கல்யாணம் பண்ணிக்கிறியா?’
‘போடா கருவாயா’ எனத் திட்டிவிட்டாள்."


தனக்குத்தானே கெக்கே பிக்கே வென்று சிரித்துக் கொண்டிருந்தார் யமன்.

ஹும்ம்... எல்லாம் என் தலைஎழுத்து... என்று மீண்டும் ஒரு படித்த கவிதையையே சமைத்தார்...

"நீங்கள்
பிறருக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்

யூதன்
தான் செய்த சிலுவையில் எவரை அடித்துக் கொன்றானோ
துயரம்
குளிரும் ஆணிகள்
பிய்ந்த கண்ணீர்
ஒருதுளி ஆத்மா
இரங்கற்பா.
ஆமென்.
"

தன் மேல் கழிவிரக்கம் மிகுந்து அதுவே கோவமானது யமனுக்கு. நேராக யமியிடம் போனார்...

"என்னடி நினைத்துக் கொண்டிருக்கிறாய்" பிளாக் பெர்ரி தூள் தூளானது.

"இங்கே கேளுடி கவிதையை.. இதுதாண்டி கவிதை.. போன்ல கவிதை கேக்குதோ கவிதை" என்று திடீர் புரட்சிக்காரனான யமனை பேரதிர்ச்சியோடு பார்க்கிறாள் யமி.

அங்கிருந்த ஒரு பாறை மேல் ஏறி நின்று கொண்டு... பாடுகிறார் யமன்..

அடைத்தாலும் தப்புவேனடி கிராதகி .... நீங்கள் தூவிய பூக்கள் என் காலைத் தடுக்கியது. நீங்கள் தட்டிக் கொடுத்தபோது என் சட்டையில் தையல் விட்டது.
தமிழகப் பெட்டிக் கடைகளில் எனக்கான தேன்மிட்டாய்களை அமுக்கிவிடவா முடியும்?
எழுதிக்கொள்ளுங்கள்
எதிரிகளே!
என்னைச் சிறையிலடைத்தாலும்
நான் கம்பியிடம் கவிதை பாடி
வெளியே வந்துவிடுவேன்.
என் பென்சிலுக்கு ரப்பர் இல்லை.
என் பாஷையை
கழுதைகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுச் சாவேன்.
….. என் எழுத்து
படிக்கும் மக்களின் தலையெழுத்து!
... என் இதயத்தைச் சொறியாதீர்கள்.
பேண்ட்டைக் கிழித்து
பெர்முடாஸ் ஆக்கிவிடலாம் என்று
பிழை செய்யாதீர்கள்.
சில நூற்றாண்டுகளுக்குத்
தேவையான தாட்களை – என்
கொடவுனில் நான்
சேமித்து வைத்திருக்கிறேன்."

என்று சீறினார் யமன்.

இவள் வியந்து நிற்கின்றாள்!

14 comments:

 1. வாவ், வித்தியாசமா தொகுத்திருக்கீங்க விதூஷ். கலக்கல்.

  ReplyDelete
 2. வித்தியாசமா அறிமுகங்களை தொகுத்து இருக்கீங்க.
  தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 4. புது விதமாய் தொகுத்துள்ளீர்கள் விதூஷ்

  ReplyDelete
 5. அண்ணாகண்ணன் கவிதை நல்லாயிருக்குங்க!!!

  ReplyDelete
 6. நளாயினி தாமரைச்செல்வன் கவிதை சூப்பர்ப்ப்ப்ப்

  ReplyDelete
 7. வசுமித்ர கவிதை தளம் அருமை

  ReplyDelete
 8. வித்தியாச அறிமுகங்கள்.
  கலக்கல்.

  ReplyDelete
 9. எல்லா தளங்களையும் வித்தியாசமா அறிமுகம் செய்யறீங்க! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. உங்க கவிதைகளை எப்ப எழுதுவீங்க? :):):)

  ReplyDelete
 11. தலைப்புகள் டாப்பா போட்டு அறிமுகம்,,,

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது