07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 18, 2010

சவால்!!!

எனக்கு சவால் என்றாலே அலர்ஜி. அதுவும் கதை எழுதுவதில் ஒரு சவால் என்றால் ஓடியே விடுவேன். நண்பர் பரிசல் ஒரு சவால் சிறுகதை போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். முதலில் அவரது அந்த முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டும் நன்றியும்.
75+ கதைகள் வந்திருப்பதாக சொல்லியிருந்தார். பெரிய விஷயம். 75 பேரை கதை எழுத வைப்பதென்பது சாதாரண விஷயமல்ல.

பரிசல் சிறுகதை போட்டி பற்றி ஒரு கிசு கிசு. நடுவர் குழுவில் கேபிள் சங்கர் இருக்கிறார்.உண்மையா?

எனக்கு சிறு வயதிலிருந்து பிடித்த ஒரு/ஒரே கலை வடிவம் கதை. என் துர்ரதிர்ஷ்டம் என்னவென்றால் கதையை நான் முதல் முதலில் நுகரத்தொடங்கியது திரைப்படங்களில். அதுமுதல் கதை என்றால் அது திரைப்படத்தில் வருவது மட்டும் தான் என்று அப்பாவியாய் நம்பிக்கொண்டிருந்தேன் . திரைப்படங்களில் கதைகள் எப்படியெல்லாம் சொல்லப்படுகிறது என்பதை மட்டுமே ஆர்வத்தோடு கவனிக்கத்தொடங்கினேன்.

நான் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கத்துவங்கியது பதினொன்றாம் வகுப்பு தொடக்கத்தில் தான். அதுவரை நான் அதிகபட்சம் ஐந்து திரைப்படங்கள் பார்த்திருப்பேன். சிறு வயதில் என் நண்பர்கள் பெரும்பாலானோர் தியேட்டருக்கு போய் திரைப்படம் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள். அவர்கள் படம் பார்த்துவிட்டு வகுப்பிலோ அல்லது விளையாட்டு நேரத்திலோ அந்த படம் பற்றி பேசுவார்கள். முதலில் அவர்களை ஈர்ப்பது திரைப்படத்தில் வரும் சண்டை காட்சிகளாக இருக்கும். "ரஜினி எப்படி அடிச்சாரு இல்ல?" என்று தான் பேசத் தொடங்குவார்கள். சில நண்பர்கள் பாடல்காட்சிகளையும் நடனத்தையும் துல்லியமாக கிரகித்து அதையே செய்துகாட்டுவார்கள். விதிவிலக்கில்லாமல் எல்லோருக்கும் காமெடி காட்சிகள் பிடிக்கும். அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் சொல்லிச்சொல்லி சிரித்துக்கொள்வார்கள். அதில் வரும் பிரபலமான வசனத்தை ஒருவருக்கொருவர் வீசி எறிந்து மகிழ்வார்கள்.

எனக்கோ ஒரு திரைப்படத்தில் ஆச்சரியத்தையும் வியப்பையும் தருவது அத்திரைப்படத்தின் கதை மட்டுமே. ஏன் எனக்கு பாடல் நடனம் சண்டை காமெடி நடிகை நடிகர் இவர்களை தாண்டி கதையின் மீதே அதிக ஆர்வமிருக்கிறது? அப்படி கதையின் மீது வினோதமாக காதல் கொண்டவன் அநேகமாக என் வகுப்பில் நான் மட்டும் தான். அமரன் என்றொரு திரைப்படம் வந்தது. அந்த திரைப்படம் வந்த புதிதில் எல்லா நண்பர்களும் ரௌடிகள் போலவே உலா வந்தார்கள். அவர்களுக்கு கதாநாயகனின் ஹீரோயிசத்தின் மேல் ஈர்ப்பு. நானோ அப்படி ஒரு ஹீரோசியிசம் கலந்த கதாபாத்திரத்தை வடித்த கதாசிரியன் எப்படி யோசித்திருக்கிறான் என்று வியந்துகொண்டிருப்பேன்.

எனக்கு பாட வராது. நடனம் வாய்ப்பேயில்லை. நன்றாக பேசுவேன். நாடகங்கள் நடித்திருக்கிறேன். பிரதான பாத்திரங்களை எனக்கே அளிப்பார்கள் காரணம் நான் குரல் உயர்த்தி தெளிவாக வசனம் பேசக்கூடியவன் என்பதால். என் பள்ளியில் பெரும்பாலான நாடகங்களில் பெண் கதாபாத்திரம் தான் இறுதியில் ஒரு பக்க வசனம் பேசி மற்றவர்களை எல்லாம் திருத்தி சுபமாக நாடகத்தை முடித்து வைக்கும். நான் படித்ததோ ஆண்கள் பள்ளிக்கூடம். பிறகு என்ன எனக்கே பெண் வேடம் போட்டு பக்கம் பக்கமாக வசனம் கொடுத்து பேசச்சொல்லி விடுவார்கள். அந்த காலகட்டங்களில் நடிப்பில் எனக்கு ஆர்வம் இருந்தது. ஜனரஞ்சகமாக எளிதில் அனைவரையும் கவரும் நடனம் பாடல் சண்டை நகைச்சுவை இவைகளை விட கதை நடிப்பு என்பதிலேயே என் நாட்டமிருந்தது.

வார இதழ்களில் குறிப்பாக குடும்பமலர் குமுதம் இவைகளில் வரும் சிறுகதைகளை காட்டிலும் சினிமா கதை தான் உசத்தி என்று நம்பிக்கொண்டிருந்தேன்.

சுஜாதாவே கூட எனக்கு முதலில் எழுத்தாளராய் அறிமுகமாகவில்லை. சுஜாதா புத்தகம் எழுதியிருப்பார் என்றெல்லாம் எனக்கு அப்போது அபிப்ராயம் இல்லை. அவர் ஒரு சினிமா வசனகர்த்தா. ஒரு நாள் இணையத்தில் மணிரத்னம் பற்றிய ஒரு கட்டுரையில் சுஜாதா வந்தார். அவருடைய ரோஜா திரைப்படத்தில் சுஜாதாவின் கதை உபயோகப்பட்டதை குறித்து எழுதப்பட்டிருந்தது. அப்போது தான் சுஜாதா சிறுகதை எழுதுபவர் என்ற அரிய தகவலை அறிந்துகொண்டேன். நான் முதல் முதலில் படித்த சுஜாதா சிறுகதை 'அரிசி'. அதுவும் இணையத்தில் தான். esnips.com

அதன் பிறகு தொடர்ச்சியாக அவருடைய கதைகள் அனைத்தையும் இணையத்திலேயே வாசித்தேன். ஈபுக் வாங்கித்தான் படித்தேன். ஒரு புத்தகம் மூன்று டாலர் அல்லது ஐந்து டாலர்.

குடும்பமலர் குமுதம் படித்த காலகட்டங்களில் கூட அதில் வரும் சிறுகதை போல் நாமும் ஒன்று எழுதவேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்ததே இல்லை. எழுதினா சினிமா கதை தான்டா என்று எனக்கு நானே தொடை தட்டி சவால் விட்ட காலம். எப்போதும் சினிமா கதைகள் குறித்தே சிந்தித்துக்கொண்டிருப்பேன். அப்போதைக்கு என் மிகப்பெரிய லட்சியமே சினிமாவுக்கு கதை எழுதுவது. சினிமாவுக்கு நல்ல கதை ரெடியானால் உடனே நான் இயக்குனர் ஆகி கேமராவை பிடித்தபடி போஸ் கொடுக்கலாம் என்ற சிறுபிள்ளைத்தனமான கற்பனையில் என் சினிமா + கதை மோகம் வளர்ந்துகொண்டே போனது.

சினிமாவுக்காக என் மனதுக்குள்ளேயே ஒரு கதையை கட்டமைப்பேன். என் நண்பர்கள் சிலரிடம் சொல்லி, கொட்டாவி விடுவார்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆறு மாதம் ஒரு திரைப்படத்திற்கான கதையை மனதில் மறுபடி மறுபடி சொல்லிச்சொல்லி மெருகேற்றுவேன். எந்த இடத்தில் பாடல்கள் வரவேண்டும் எங்கே சண்டை யார் நடிகர் என்றெல்லாம் மனதில் கற்பனை செய்துகொள்வேன்.ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் அனுக்ஷாவை நினைத்து இன்புறுவதை போல்.

இப்போது நினைத்தால் அந்த சம்பவங்கள் எல்லாம் வேடிக்கையாக இருக்கும். ஏதோ ஒரு கதை. உதாரணமாக அப்போது டெஸ்ட் டியூப் பேபி பற்றி ஒரு கட்டுரை வாசித்தேன். உடனே அதையே கருவாக வைத்து ஒரு கதை இரண்டே வாரத்தில் தயாராகிவிட்டது. ஹீரோயின் ஐஸ்வர்யா ராய்.

மாமியாரை மாமனாரை மருமகனை மருமகளை திருடனை பிள்ளையை தாயை தகப்பனை என்று ஓயாமல் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை கிளைமாக்ஸில் திருத்திக்கொண்டே வரும் குடும்பமலர் குமுதம் சிறுகதைகளை தாண்டி உண்மையில் அறிவார்த்தமான உணர்வுபூர்வமான பிரமாண்டமான விறுவிறுப்பான ஒரு கதை சொல்லவேண்டுமென்றால் அது சினிமா தான் என்ற என் ஆழமான நம்பிக்கையை பளீரென உடைத்தெறிந்தவர் சுஜாதா.

சுஜாதாவை படிக்கும் வரை சிறுகதை என்ற வடிவத்தின் மீது எனக்கு நாட்டம் இருந்ததே இல்லை. ஆனால் சுஜாதாவின் முதல் சிறுகதை படித்தபோது சினிமாவில் சொல்லப்படும் கதைகளை விட மிக நேர்த்தியான வலுவான நுட்பமான பிரமாண்டமான கதைகளை சிறுகதை வடிவத்தில் சுருஷ்டிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. அதனால் தானோ என்னமோ இன்னும் சுஜாதாவை நிறைய பேர் வாத்தியார் என்கிறார்கள்.

வெறும் கதை என்றால் அது சினிமா கதை தான் என்ற மிக பாமரத்தனமான என் எண்ணத்தை அகற்றி கதை சொல்லும் ஆர்வத்திற்கும் வீச்சுக்கும் சிறுகதை என்ற வடிவம் நல்ல வடிகால் என்று உணர்த்தியவர் சுஜாதா. சுஜாதாவை தேடித்தேடி வாசித்தேன். வாசித்துவிட்டு ஏன் நாம் ஒரு கதை எழுதக்கூடாது என்று ஒரு நாள் எழுத உட்கார்ந்தேன். உண்மையில் முதல் கதையை ஒரு வாரம் எழுதினேன்.

திருத்தி திருத்தி எழுதினேன். தப்பு தப்பாய் எழுதினேன். வெறும் ஒன்றரை பக்கம் தான் எழுத முடிந்தது. கதையில் விபத்துக்குள்ளாகும் ஒரு விமானம், எரியும் ஒரு ஊர், ஒரு அப்பாவி குழந்தை, நிறைய பணக்காரர்கள் என இத்தனை பிரமாண்டம். ஆனால் என்னால் எழுத முடிந்ததோ ஒன்றரை பக்கம். வார்த்தை கான்ஸ்டிபேஷன். எங்கே தொடங்குவது எங்கே முடிப்பது. குழப்பம்.......

ஒன்றரை பக்கம் தான் எழுதினேன். விபத்து எப்படி நடந்ததென்று சொன்னால் விவரணையாக வாய்வார்த்தையாக விளக்கிவிடலாம். அதையே எழுதிக்காட்ட சொன்னால்....விபத்து நடந்த இடத்தில் நான் இல்லவே இல்லை என்று ஓடி வந்துவிடுவேன்.

இதனால் வாசக கோகோகோடிகளுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் என்னவென்றால் சார் கதை எழுதுறதுங்குறது ரொம்ப கஷ்டமான அதே சமயம் யூஸ்லெஸ் ஜாப்.

---------------------

வலைச்சரத்தில் ஒரு வாரம் எழுத அழைப்பு வந்தபோது குபீர் என்று வியர்த்தது. பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி. ஏழு நாள் ஏழு பதிவு. அதுவும் புதிய ஸ்வாரஸ்யமான பதிவர் பதிவுகளை அறிமுகப்படுத்தவேண்டும். ஒரு வாரத்துக்கு ஒரு பதிவு எழுதுவதே சவாலான எனக்கு ஒரு நாளைகு ஒரு பதிவு என்பது சவாலுக்கே சவால்.

எப்படி சமாளிக்கிறேன் என்று பாருங்கள்

ஆசிரியர் சீனா அவர்களுக்கும் மற்றும் அவரது குழுவினருக்கும் என் நன்றிகள்.

என் வலை பக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த சில இடுகைகளை இங்கே திரட்டியிருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்குமென்று நம்புகிறேன்.

முதலிரவில் முதல் கொலை
அதிஷாவால் உதை வாங்கிய உ.உ.

இப்படிக்கு நிஷா
சாவுகிராக்கி
திரிஷாவும் நானும் - தமன்னாவும் நானும்
மீண்டும் மீண்டும் அவன்பார்வை
உதடுகள்

இப்போதைக்கு இது போதும். நாளை சந்திப்போமா?

16 comments:

 1. வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 2. //ஒரு நாளைகு ஒரு பதிவு என்பது சவாலுக்கே சவால். //

  ஹா..ஹா.. !! :-)

  ReplyDelete
 3. அன்பின் விசா /r

  அருமையான துவக்கம் - சுய அறிமுகம் மிக மிக அருமை. சுட்டிகள் அனைத்தும் சென்று பார்க்கிறேன். நல்வாழ்த்துகள் விசா - நட்புடன் சீனா

  ReplyDelete
 4. சவாலில் வெற்றிபெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. சவாலில் வெற்றிபெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. அன்பின் விசா - அத்தனையும் படித்து ரசித்து மறுமொழியும் போட்டாச்சு - சூப்பர் கதைகள் - நல்வாழ்த்துகள் விசா - நட்புடன் சீனா

  ReplyDelete
 7. அன்பின் விசா - அத்தனையும் படித்து ரசித்து மறுமொழியும் போட்டாச்சு - சூப்பர் கதைகள் - நல்வாழ்த்துகள் விசா - நட்புடன் சீனா

  ReplyDelete
 8. அன்பின் விசா - அத்தனையும் படித்து ரசித்து மறுமொழியும் போட்டாச்சு - சூப்பர் கதைகள் - நல்வாழ்த்துகள் விசா - நட்புடன் சீனா

  ReplyDelete
 9. வாங்க விசா! இந்த வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. அடிச்சு ஓட்டுங்க.

  ReplyDelete
 11. சந்தோஷமா இருக்கு சார் வாழ்த்துகள்!
  ஒருவாரம் முழுவதும் கலக்குங்கோ!

  கதையெழுதுறது ரொம்பவே கஷ்டம் சார் அதுவும் உங்களைப்போல சுவாரஷ்யமா ஜனரஞ்சகமா எழுதுறது கஷ்டமோ கஷ்டம்!

  பேசிக்கலி இந்த சவால் தொடர் எதுவுமே நான் படிக்கலை ஏன்னா எனக்கு அதோட ஆரம்பமே புரியலை!

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் நண்பா

  விஜய்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது