07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 7, 2011

முத்துச்சரம் ஒரு அறிமுகம் - வலைச்சரம் திங்கள்

வலைச்சரம் மூலமாக உங்களை இந்த ஒருவாரமும் சந்திக்க இருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி. பதிவுலகம் வந்த மூன்று மாதங்களிலேயே சீனா சார் இந்த வாய்ப்பை வழங்கிய போது அதிகம் பேரை அறிந்திராத நிலையில் 'இன்னும் சிலகாலம் செல்லட்டுமே’ எனக் கேட்டுக் கொண்டது சரியா தவறா தெரியவில்லை. ஏனெனில் அதன் பிறகு வெவ்வேறு சமயங்களில் மூன்று முறை வாய்ப்பு தேடிவந்த போதும் ஏற்றுக் கொள்ள இயலாத சூழல். புரிந்தணர்வுடன் 'வலைச்சரம் காத்திருக்கும்’ எனப் பெருந்தன்மையுடன் சொன்ன சீனா சாரின் ஆசிகளுடன் ஆசிரியர் பொறுப்பைத் தொடங்குகிறேன். ஒருவகையில் தாமதமாகச் செய்வதன் பலன் இரண்டரையாண்டு வலையுலக வாசிப்பில் கூடுதலாகச் சிலரை அறிமுகப் படுத்தக் கிடைத்த நல்வாய்ப்பு என்றே கருதுகிறேன்.

மகளிர் தினம் இடம் பெறும் இவ்வாரத்தில், முதல் சில நாட்களை மகளிர் சிறப்புச் சரமாகத் தொடுக்க இருப்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.



இனி, என்னைப் பற்றிய அறிமுகமாய் முத்துச்சரத்தின் சில முத்துக்கள்:

தீராத ஆர்வம்..பேனாவும் காமிராவும்..: “முடிவற்ற தேடலிலும், கற்றலிலுமே கலைகள் வளருகின்றன.

சென்ற வருட இறுதியில் கடந்த வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் ஒரு டைரிக்குறிப்பாக எழுதியது. இதுவே ஓரளவு என்னைப்பற்றிய அறிமுகத்தைத் தந்து விடும்.

மனதுக்குப் பிடித்தமான பதிவுகள் என பல இருப்பினும், சமூகம் மற்றும் வாழ்வு சார்ந்ததாக எழுதியவற்றில் சிலவற்றை முன் நிறுத்த விரும்புகிறேன்.

கட்டுரைகள்:

இவர்களும் நண்பர்களே:. “கடவுள் நம் மீது கொண்ட கருணையினால் நல்ல குடும்பம் பெற்றோர் குழந்தைகள் அமைய பெறுகிறோம். ஆனால் அப்படி அமையப் பெறாதவர்... ஏதோ ஒரு சமயத்தில் கடவுளின் கருணை சற்றே குறைந்ததனால் இப்போது ஆதரவற்றோர் இல்லங்களில். இருப்பினும் இவர்களை என்றைக்கும் கடவுளின் குழந்தைகளாகவே அறியப் பட வைத்து பாசம் காட்டுவதும் கடவுள்தான். அவரது தேவைகளை உணர்ந்து தீர்த்து வைக்கத் தூதுவர்களாய் பிற மனிதர்களாகிய நம்மை அனுப்புவதும் கடவுள்தான்.

இடுகையின் நோக்கம் தமிழ்மணம் விருது 2009-ல் சமூகம் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றதன் மூலம் பலரையும் சென்றடைந்ததில் மனதுக்கு ஒரு நிறைவு.

செல்வக் களஞ்சியங்கள்
: “எந்த எதிர்பார்ப்புகளுமின்றி குழந்தைகளுக்கு நாம் தரும் அன்பே பரிசுத்தமானது. அதில் ஆண் என்ன பெண் என்ன என நினைத்துப் பார்ப்போம்.”

இக்கருத்தை பலரிடம் எடுத்துச் சென்ற இணைய இதழ்களுக்கும், லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகைக்கும் நன்றி.
***
சதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்...: “சதுரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்?

யூத்ஃபுல் விகடனில் வெளியாகி, பின்னர் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் புத்தாண்டு சிறப்பிதழ் மூலமாக ‘பெண்ணுக்குப் பேதம் வேண்டாம்’ எனப் பலரைச் சென்றடைந்த இக்கட்டுரை ‘பெண்ணியம்’ தளத்திலும்.
***
நல்வாழ்வு தந்தாயே நீயே!:“அம்மாக்கள் என்றைக்கும் அம்மாக்களாகவே இருக்கிறார்கள் தன்னலமற்ற பாசத்தைப் பொழிந்து கொண்டு. அதை நாம் பயன்படுத்திக் கொள்கிற மாதிரி எந்த சமயத்திலும் நடந்திடக் கூடாது. நாமும் ஆகி விட்டோம் பெற்றோராய்.

‘அம்மா அருமை எப்போ தெரியும்?’ ஆக லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையிலும், யூத்ஃபுல் விகடன் அன்னையர் தினச் சிறப்புப் பரிந்துரையிலும்.
***
உலகம் உய்ய..-தண்ணீர் தினத்துக்காக..:“அழிக்கப்பட்டு வரும் காடுகரைகள், காணாமல் போய்க் கொண்டிருக்கும் விளை நிலங்கள், வெட்டி வீழ்த்தப்பட்டு வரும் மரங்கள், நதிகளில் கலக்கும் ஆலைக்கழிவுகள், மாசாகும் சுற்றுப்புறம் என ஒன்றை அடைய ஒன்றை அழித்து ஓடிக் கொண்டேயிருக்கிறோம்.., மேலேயும் போக முடியாமல் எந்தப் பக்கமும் திரும்ப வழியற்ற ஒருபுள்ளியில் நின்றுவிடக் கூடிய அபாயத்தை உணராமல்.

வந்து விட்டது கோடை. இந்நேரம் அவசியம் பகிர வேண்டிய பதிவுகளில் ஒன்றாக எண்ணுகிறேன். யூத்ஃபுல் விகடன் பரிந்துரையிலும், வெள்ளி நிலா இதழிலும்..
***
திண்ணை நினைவுகள்-கயல்விழி முத்துலெட்சுமிக்கு ராமலெட்சுமியின் கடிதம்

இக்கட்டுரையைக் குறிப்பிடாமல் கடந்து விட முடியாது. என் வலைப்பூவைப் பற்றி பேச ஆரம்பிக்கையில் பலரும் குறிப்பிட்டு சிலாகிக்கும் முதல் இடுகை இதுவாகவே இருக்கிறது பெரும்பாலும். பதிவிலிருக்கும் கடைசி பின்னூட்டங்களில் someone like you என்பவரின் ஒருசில வார்த்தைகள் மட்டும் இங்கே: “அந்தக் காலத்து classics திருவிளையாடல், காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம்.........வரிசையில் இந்தக் கடிதமும் ஒரு classic, ஒரு காவியம்.

கலைமகள் மாத இதழின் வலைப்பதிவர் அறிமுகத்திலும் பரிந்துரைக்கப் பட்ட இப்பதிவு, கலாச்சாரம் பிரிவில் தமிழ்மணம் விருது 2008-ன் இறுதிச் சுற்றை எட்டிய ஒன்றும் ஆகும்.

கவிதைகள்:
அழகிய வீரர்கள், ராணித்தேனீ - நவீன விருட்சம்

முகமூடிகள், நட்சத்திரங்கள் - உயிரோசை

பிறழாத பிரவாகம், கேள்விகளைத் தேடி..
- அகநாழிகை

ஒற்றைப் பேனாவின் மை - திண்ணை

நோட்டு மாலைகள், சீற்றம், பால்நிலா - யூத்ஃபுல் விகடன்

ஒரு நதியின் பயணம்
, பவனி - வடக்கு வாசல்

குழந்தைகளை அவதானித்தவையாக, ஆனந்த விகடன் சொல்வனத்தில் பொம்மையம்மா’, கல்கி கவிதை கஃபேயில்தவிப்பு’,‘குளிர்நிலவு’!


சிறுகதைகள்:
வயலோடு உறவாடி..- தினமணி கதிர்: “தோட்டத்தில் பம்பு செட்டுக் குளியல், பண்ணையில் துள்ளும் கன்றுகளோடு ஆட்டம், வயலில் வைக்கோற் போரையே சறுக்கு மரமாக்கி வழுக்கி ஆடியது, வாழை கொய்யா பப்பாளி இளநீர் என பறித்த கையோடு குளிரக் குளிர வயிற்றை நிரப்பியது எல்லாம் எப்போது நினைத்தாலும் மனது குளிர்ந்து போகும்.
***
பொட்டலம் : லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்:. “தம் போன்ற மக்களுக்கும் இதெல்லாம் சாத்தியம் எனக் கண்ட கனவு எல்லாம் கானல் நீரேதானா என்ற கேள்வி எழும்பியது.
***
உலகம் அழகானது - கலைமகள் தீபாவளி மலர்:“விலங்குகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? இவர்கள் போன்ற கடைக்கோடி மனிதர் முதல் கோடானு கோடீஸ்வரர் வரை ‘சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்’ என சொல்லித் தங்களை நியாயப்படுத்திக் கொண்டு, இவ்வுலகையே போட்டியும் பொறாமையும் நிறைந்ததாக்கி விட்டார்கள் என்றே தோன்றியது.
***
கைமாறு - தினமணி கதிர்:“தேவைக்கு உதவியா பெறப்படுற.. உயிர் காக்குற.. திரவம்..... பணம் கட்டி வாங்கினாலும் இது நீங்க இலவசமா எடுத்துக்கற மாதிரிதான். ஏன்னா நம்ம நாட்டில எல்லோருமே எதையுமே இலவசமா வாங்கி ருசி கண்டுட்டோம்.
***

ஆயர்ப்பாடி மாளிகையில்.. - தினமணி கதிர்
: “ஆயர்ப்பாடி மாளிகைகள் அன்பாலே நிறைந்து விட்டால் அங்கே கிருஷ்ணன், பலராம் மட்டுமில்லாமல் அவர்கள் நண்பர்களும் யசோதைக்கு தாய்மையைத் தர முடிகிற அதிசயமும், குடும்பத்தையே குதூகலிக்க வைக்க முடிகிற அற்புதமும்..
***
விசுவாசம் - கலைமகள்
விசுவாசங்கிறது ஒருவரோடு உயர்விலேயும் தாழ்விலேயும் கூடவே இருக்கிறது மட்டுமில்ல. நம்ம நலனுக்கு ஒவ்வாததாய் ஏதும் நடக்கையில் பெரிசு பண்ணாத இருக்கிறதுந்தான்.
***

நூல் விமர்சனங்கள்:
யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - நிலாரசிகன் சிறுகதைத் தொகுப்பு: “ . “..மாறுபட்ட களங்களில் இயல்பான அழகான எழுத்து நடையில். சிறுகதைப் பிரியர்களின் சேகரிப்பில் அவசியம் இருக்க வேண்டிய தொகுப்பு.
***
கோவில் மிருகம் - விநாயக முருகன் கவிதைத் தொகுப்பு :“அன்றாட அவலங்களை, மனிதரின் மறுபக்கங்களை, மடிந்து வரும் நேயங்களை ஒரு நெடும் பயணத்தில், பாரதியின் சீற்றம் கலந்த எள்ளலுடன், சமூக அக்கறையும் ஆதங்கமும் தொனிக்க..
***

இந்தத் தளத்தில் தொடர்ந்து இயங்க ஆசை. நேரமின்மையால் இயலவில்லை. வாசிப்புக்காக அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்கிற புதுவருட நிலைப்பாட்டினை செயல்படுத்த இயலாமல் இரண்டு மாதங்கள் ஓடிவிட்டிருந்தாலும் நம்பிக்கை உள்ளது:)!


புகைப்படங்கள்:
புகைப்படங்களை முத்துச்சரத்தில் PiT மாதாந்திரப் போட்டிப் பதிவுகளாகவும், பேசும் படங்களாகவும், ஃபிளிக்கர் தளத்தில் [http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/] காட்சிக் கவிதைகளாகவும் பகிர்ந்து வருகிறேன். போட்டிக்காக படத்தைக் கொடுப்பதுடன் நின்று விடாமல் ஒவ்வொரு முறையும் இயன்றவரை ஒன்றுக்கும் மேலான படங்களை ஆர்வத்துடன் தொகுத்து வழங்கியது நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் அவற்றில் பல யூத்ஃபுல் விகடன் பரிந்துரையில் இடம்பெற்றன. காட்சிப் படைப்புகளுக்காகத் தொடர்ந்து 2009 மற்றும் 2010-ல் கிடைத்த தமிழ்மணம் விருதுகளை மிகச் சிறந்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்!

தேவதை பத்திரிகை தனது ‘வலையோடு விளையாடு’ பக்கத்துக்காக முத்துச்சரத்தை அறிமுகம் செய்த வேளையில் இரண்டு பக்கங்களுக்கு நான் எடுத்தப் புகைப்படங்களை வெளியிட்டுச் சிறப்பித்திருந்தது.

மேலும்,

‘இந்த வார சிறந்த படம்’ ஆக PiT தளம் கெளரவித்த படம், “கடல வாங்குங்க

PiT தளத்தில் கற்ற பாடத்தால் பிற்தயாரிப்பு செய்ததில் பொலிவு பெற்று, பரிசாக ‘இந்த வார சிறந்த படமாய்’ தனிக்கவனம் பெற்ற “போகுமிடம் வெகு தூரமில்லை”. இப்பதிவில் ஃப்ளிக்கர் தளத்தில் எப்படிச் சேர வேண்டும் என்பது குறித்த விவரங்களையும் தந்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்களுக்குப் பயனாகலாம்.

Land Mark{PiT]: தமிழ்மணம் விருது 2009-ல் வெள்ளிப் பதக்கம், யூத்ஃபுல் விகடன் பரிந்துரை

ஏரிக்கரைப் பூங்காற்றே-குமரகம் புகைப்படங்கள்
[PiT}: தமிழ்மணம் விருது 2010-ல் வெள்ளிப் பதக்கம், யூத்ஃபுல் விகடன் பரிந்துரை

தண்ணி காட்டறேன்[PiT]:கடல், ஏரி, குளம்,அருவி, வாய்க்கால், கிணறு, ஊற்று, பம்ப் செட் எதையும் விட்டு வைக்கவில்லை.

ஒற்றை[PiT]: சிங்கிள் சிங்கிளாய் சிலிர்ந்து நிற்கும் விலங்கு பறவைகளின் அணிவகுப்பு

உதய கீதங்களும் அந்தி ராகங்களும்
[PiT, யூத்ஃபுல் விகடன் பரிந்துரை]: வானின் வர்ண ஜாலங்கள்

இந்திய சிற்பக்கலையின் பெருமையை உலகுக்குக் காட்டும் வாய்ப்பாக அமைந்த பதிவுகள்:
1.வழிப்பாட்டுத் தலங்கள்[PiT, யூத்ஃபுல் விகடன் பரிந்துரை]
2.இறையும் கலையும் - நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள்

மலர்களைக் கண்டு மயங்காத மனமும் உண்டோ..!?!
1.பெங்களூரு லால்பாக்-குடியரசுதின மலர் கண்காட்சி 2010
2.2011 பெங்களூரு குடியரசு தின மலர் கண்காட்சி புகைப்படங்கள்
3.மொட்டு ஒண்ணு மெல்ல மெல்ல..

சமீபத்தில் ஓடும் [ஜெட் வேகத்தில் பறந்த என்றும் சொல்லலாம்] வண்டியிலிருந்து செய்த முயற்சியாக, அதிவேகத்தில் சிறையான எழிலோவியப் படங்கள்-கிருஷ்ணகிரி மாம்பழங்கள்.

சுய அறிமுகம் சுய புராணமாகி விட்டது! இருக்கட்டும் விடுங்களேன், மகளிர் தின வாரத்தில் எங்கள் சக்தியை நாங்களே கொண்டாடிக் கொள்ளாவிட்டால் எப்படி:)?

அதுவுமில்லாமல், புதிதாக எழுத வருபவர்களுக்கு இணைய இதழ்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு முயன்றிடவும், புகைப்படக் கலையில் ஆர்வம் உள்ளவர்கள் PiT, Flickr மூலமாகத் தம்மை மேம்படுத்திக் கொள்ள ஒரு தூண்டுதலாகவும், இப்பதிவு இருக்கும் என மனப்பூர்வமாக நம்புகிறேன்.

நாளை சந்திப்போம்!
*****

86 comments:

  1. வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..மகளிர் தினத்தன்றும் வலைச்சர ஆசிரியப்பணியில் ஜொலிக்கபோகின்றீர்கள்.செவ்வன பணியை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அடேங்கப்பா.. ஓப்பனிங்கலயே செஞ்சுரியா?

    ReplyDelete
  3. உங்களைப்பற்றிய விபரமும்,உங்களின் அனைத்து படைப்புக்களும் ஒரு சேர கண்டதில் மிக்க மகிழ்ச்சி.வாசிக்க நிறைய இருக்கு.பெண்கள் வீட்டின்,நாட்டின் கண்களாச்சே!பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்க.மகளிர் சிறப்புச்ச்சரம் காண மிக ஆவல்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ..யப்பா இதுவரை வெளியான லிஸ்ட் பார்த்தா நீங்க ப்ளாகிலும் எழுதுறீங்க அப்படின்னு தான் சொல்லணும் :-)

    ReplyDelete
  5. வாழ்த்துகள்.. வாழ்த்துகள்.. ராமலஷ்மி.

    ReplyDelete
  6. மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.

    அடிச்சு ஆடப்போறீங்கன்னு 'பட்சி' சொல்லிட்டுப்போச்சு அதிகாலையில்!

    ReplyDelete
  7. வாழ்த்தி வரவேற்கிறோம், புதிய அறிமுகங்கள் தொடங்கட்டும்..

    எனது வலைபூவில் இன்று:
    இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

    ReplyDelete
  8. வாங்க ராமலஷ்மி கலக்கலான அறிமுகங்களை எதிர்பார்க்கிறேன்
    வலைச்சர திங்கள் அருமை

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.


    வலைச்சர ஆசிரியராய் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    உலக மகளிர்தினத்தில் உங்களை வலைச்சர ஆசிரியராய் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி.

    ReplyDelete
  10. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. உங்கள் பேர் சொல்லும் பதிவு... பாராட்டுக்கள், அக்கா!

    ReplyDelete
  12. இப்பத்தான் நீங்க இங்கயான்னு ஆச்சர்யத்தோட பார்த்தேன்; பதில் முதலிலேயே கிடைத்துவிட்டது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  14. அபாரமான அலசல் மூச்சு முட்டுகிறது

    நலம் பெற இறைவன் துணை

    ReplyDelete
  15. பன்முக திறமைக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
    தொடர்ந்து ஜொலிக்க வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  17. இந்த வார வலைச்சர ஆசிரியர் ராமலக்ஷ்மிக்கு, மகளிர் தினம் வரும் இந்த வாரத்தில், சிறப்பாய் பணியாற்றவாழ்த்துகள்!

    ReplyDelete
  18. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  20. வாழ்த்துகள் :)

    கலக்குங்க :)

    ReplyDelete
  21. // சுய அறிமுகம் சுய புராணமாகி விட்டது! //

    இது உங்களுக்கே ரொம்ப ஓவராத் தெரியலை ?

    சரி. சரி. இனிமே அளவா எழுதுங்க..

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி

    ReplyDelete
  23. ஸாதிகா said...
    //வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..மகளிர் தினத்தன்றும் வலைச்சர ஆசிரியப்பணியில் ஜொலிக்கபோகின்றீர்கள்.செவ்வன பணியை தொடர வாழ்த்துக்கள்//

    நன்றி ஸாதிகா:)!

    ReplyDelete
  24. சி.பி.செந்தில்குமார் said...
    //அடேங்கப்பா.. ஓப்பனிங்கலயே செஞ்சுரியா?//

    இனிதான் மட்டையைக் கையில் பிடிக்கணும்:)! மிக்க நன்றி.

    ReplyDelete
  25. asiya omar said...
    //உங்களைப்பற்றிய விபரமும்,உங்களின் அனைத்து படைப்புக்களும் ஒரு சேர கண்டதில் மிக்க மகிழ்ச்சி.வாசிக்க நிறைய இருக்கு.பெண்கள் வீட்டின்,நாட்டின் கண்களாச்சே!பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்க.மகளிர் சிறப்புச்ச்சரம் காண மிக ஆவல்.//

    தங்கள் ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய முயன்றிடுகிறேன். மிக்க நன்றி:)!

    ReplyDelete
  26. நேசமித்ரன் said...
    //வாழ்த்துக்கள் !//

    மிக்க நன்றி.

    ReplyDelete
  27. மோகன் குமார் said...
    //வாழ்த்துகள் ..யப்பா இதுவரை வெளியான லிஸ்ட் பார்த்தா நீங்க ப்ளாகிலும் எழுதுறீங்க அப்படின்னு தான் சொல்லணும் :-)//

    இல்லை, ப்ளாகில் கிடைத்த ஊக்கத்தால் உருவானவைதான் இத்தனையும் என்பதுதான் சரி. நன்றி மோகன் குமார்:)!

    ReplyDelete
  28. அமைதிச்சாரல் said...
    //வாழ்த்துகள்.. வாழ்த்துகள்.. ராமலஷ்மி.//

    நன்றி அமைதிச்சாரல்.

    ReplyDelete
  29. துளசி கோபால் said...
    //மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.

    அடிச்சு ஆடப்போறீங்கன்னு 'பட்சி' சொல்லிட்டுப்போச்சு அதிகாலையில்!//

    மிக்க நன்றி மேடம், அந்தப் பட்சிக்கும்:))!

    ReplyDelete
  30. தமிழ்வாசி - Prakash said...
    //வாழ்த்தி வரவேற்கிறோம், புதிய அறிமுகங்கள் தொடங்கட்டும்..//

    மிக்க நன்றி.

    ReplyDelete
  31. Jaleela Kamal said...
    //வாங்க ராமலஷ்மி கலக்கலான அறிமுகங்களை எதிர்பார்க்கிறேன்
    வலைச்சர திங்கள் அருமை//

    நல்லது ஜலீலா. மிக்க நன்றி.

    ReplyDelete
  32. சே.குமார் said...
    //வாழ்த்துக்கள்.//

    நன்றி குமார்.

    ReplyDelete
  33. கோமதி அரசு said...
    //வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    வலைச்சர ஆசிரியராய் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    உலக மகளிர்தினத்தில் உங்களை வலைச்சர ஆசிரியராய் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி.//

    மிக்க நன்றி கோமதிம்மா.

    ReplyDelete
  34. தமிழ் உதயம் said...
    //மகிழ்ச்சி. வாழ்த்துகள்.//

    நன்றி தமிழ் உதயம்.

    ReplyDelete
  35. Chitra said...
    //உங்கள் பேர் சொல்லும் பதிவு... பாராட்டுக்கள், அக்கா!//

    நன்றி சித்ரா.

    ReplyDelete
  36. ஹுஸைனம்மா said...
    //இப்பத்தான் நீங்க இங்கயான்னு ஆச்சர்யத்தோட பார்த்தேன்; பதில் முதலிலேயே கிடைத்துவிட்டது. வாழ்த்துகள்.//

    நன்றி ஹுஸைனம்மா:)!

    ReplyDelete
  37. செல்வராஜ் ஜெகதீசன் said...
    //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

    மிக்க நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.

    ReplyDelete
  38. நேசமுடன் ஹாசிம் said...
    //அபாரமான அலசல் மூச்சு முட்டுகிறது

    நலம் பெற இறைவன் துணை//

    நானும் வேண்டிக்கறேன், நன்றி ஹாசிம்:)!

    ReplyDelete
  39. அம்பிகா said...
    //பன்முக திறமைக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
    தொடர்ந்து ஜொலிக்க வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

    நன்றி அம்பிகா.

    ReplyDelete
  40. Kurinji said...
    //வாழ்த்துக்கள் !//

    நன்றி குறிஞ்சி.

    ReplyDelete
  41. வெங்கட் நாகராஜ் said...
    //இந்த வார வலைச்சர ஆசிரியர் ராமலக்ஷ்மிக்கு, மகளிர் தினம் வரும் இந்த வாரத்தில், சிறப்பாய் பணியாற்றவாழ்த்துகள்!//

    மிக்க நன்றி நாகராஜ்.

    ReplyDelete
  42. VELU.G said...
    //வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்//

    நன்றிங்க வேலு.

    ReplyDelete
  43. SurveySan said...
    //kalakkunga.//

    நன்றி சர்வேசன்:)!

    ReplyDelete
  44. மாணவன் said...
    //வாழ்த்துக்கள் :)//

    நன்றி மாணவன்.

    ReplyDelete
  45. ஆயில்யன் said...
    //வாழ்த்துகள் :)

    கலக்குங்க :)//

    மிக்க நன்றி ஆயில்யன்:)!

    ReplyDelete
  46. Madhavan Srinivasagopalan said...
    ***// சுய அறிமுகம் சுய புராணமாகி விட்டது! //

    இது உங்களுக்கே ரொம்ப ஓவராத் தெரியலை ?/***

    தெரிந்ததால்தான் காரணமும் சொல்லியிருக்கிறேன்:)!

    //சரி. சரி. இனிமே அளவா எழுதுங்க..//

    நல்லதுங்க. நன்றி:)!

    ReplyDelete
  47. எம்.எம்.அப்துல்லா said...
    //வாழ்த்துகள் அக்கா.//

    நன்றி அப்துல்லா:)!

    ReplyDelete
  48. புதுகைத் தென்றல் said...
    //வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி//

    நன்றி தென்றல்:)!

    ReplyDelete
  49. வாழ்த்துக்கள், பின்னி பெடெலெடுங்க ஃப்ரண்ட்! முதல் பதிவை சேமிச்சு வைக்கனும். எல்லாமே ஒரே இடத்திலே கிடைக்குதே!

    ReplyDelete
  50. வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...அக்கா.பொறுப்பான பதவி.அழகாகச் செய்யத் தொடங்கிவிட்டீர்கள் !

    ReplyDelete
  51. வாழ்த்துக்கள் ராமலஷ்மி மா

    உங்கள் படைப்புகள் அதற்கு கிடைத்த அங்கீகாரம் கண்டு வியப்பின் உச்சியில் இருக்கிறேன்


    வாழ்த்த வயதில்லை எனவே வணங்குகிறேன் !!!!!

    ReplyDelete
  52. சந்தோஷமும் வாழ்த்துக்களும் மேடம்.. இந்த வாரம் தங்களின் அறிமுகங்களையும் எதிர்நோக்குகிறேன்.

    ReplyDelete
  53. அம்மாஆஆடி...
    இவ்வளவும் இன்னும் இருக்கா?
    வாருங்கள், நல்வரவு!
    தாருங்கள், புதிய பதிவு!

    -கலையன்பன்.

    (இது பாடல் பற்றிய தேடல்!)
    'வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது...)

    ReplyDelete
  54. வாழ்த்துக்கள் மேடம்.

    ReplyDelete
  55. வணக்கம் டீச்சர்..!

    இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள் டீச்சர்..!

    ReplyDelete
  56. வாழ்த்துக்கள் மேடம்!
    வந்து நடத்துங்கள்!
    ...62...

    ReplyDelete
  57. வாழ்த்துக்கள் சகோ

    விஜய்

    ReplyDelete
  58. வாழ்த்துகள் அக்கா.

    நாள் தவறாம வகுப்புக்கு வந்துடறேன் :)

    ReplyDelete
  59. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  60. அபி அப்பா said...
    //முதல் பதிவை சேமிச்சு வைக்கனும். எல்லாமே ஒரே இடத்திலே கிடைக்குதே!//

    நன்றி அபி அப்பா:)!

    ReplyDelete
  61. ஹேமா said...
    //வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...அக்கா.பொறுப்பான பதவி.அழகாகச் செய்யத் தொடங்கிவிட்டீர்கள் !//

    நன்றி ஹேமா.

    ReplyDelete
  62. திகழ் said...
    //வாழ்த்துகள்//

    நன்றி திகழ்.

    ReplyDelete
  63. sakthi said...
    //வாழ்த்துக்கள் ராமலஷ்மி மா//

    மிக்க நன்றி சக்தி.

    ReplyDelete
  64. க.பாலாசி said...
    //சந்தோஷமும் வாழ்த்துக்களும் மேடம்.. இந்த வாரம் தங்களின் அறிமுகங்களையும் எதிர்நோக்குகிறேன்.//

    நல்லது பாலாசி. நன்றி:)!

    ReplyDelete
  65. கலையன்பன் said...
    //வாருங்கள், நல்வரவு!
    தாருங்கள், புதிய பதிவு!//

    நன்றி கலையன்பன்.

    ReplyDelete
  66. அமைதி அப்பா said...
    //வாழ்த்துக்கள் மேடம்.//

    நன்றி அமைதி அப்பா.

    ReplyDelete
  67. ப்ரியமுடன் வசந்த் said...
    //வணக்கம் டீச்சர்..!

    இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள் டீச்சர்..!//

    டீச்சரா:)? நன்றி வசந்த்:)!

    ReplyDelete
  68. NIZAMUDEEN said...
    //வாழ்த்துக்கள் மேடம்!
    வந்து நடத்துங்கள்!
    ...62...//

    மிக்க நன்றி.

    ReplyDelete
  69. விஜய் said...
    //வாழ்த்துக்கள் சகோ//

    நன்றி விஜய்.

    ReplyDelete
  70. சுசி said...
    //வாழ்த்துகள் அக்கா.

    நாள் தவறாம வகுப்புக்கு வந்துடறேன் :)//

    ஆகா, மிக்க நன்றி சுசி:)!

    ReplyDelete
  71. ஸ்ரீராம். said...
    //வாழ்த்துக்கள்.//

    நன்றி ஸ்ரீராம்:)!

    ReplyDelete
  72. பூங்கொத்துடன் மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்!

    ReplyDelete
  73. மிக்க நன்றி அருணா.

    ReplyDelete
  74. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி! லிஸ்ட் இன்னும் இன்னும் பெரீ.....சா வளரட்டும்! :)

    ReplyDelete
  75. ரொம்ப லேட் ஆக வாழ்த்து சொல்ல வரேன் பா. வேலைகள் அப்படி அமைந்துவிட்டன. மனம் நிறைந்த வாழ்த்துகள். எப்பவும் மணம் வீசும் முத்துச்சரம் எல்லோரையும் அன்பு மலர்ச்சரத்தில் கட்டிவிட்டீர்கள்.

    ReplyDelete
  76. மிக்க நன்றி வல்லிம்மா:)!

    ReplyDelete
  77. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  78. நன்றி ஜெஸ்வந்தி:)!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது