07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 13, 2010

வித்வான் யமாஹாவும் சில கேள்விகளும்

'இந்த யமாஹா வாகனம் போஜ மஹாராஜா சபையில் கொடுத்த வித்வான் பட்டம் பெற்றதாக்கும்" என்றபடியே யமஹா ஹல்க்கில் சும்மா ஜம்முனு ஒரு ரைட் போய் வந்தார் யமன். அங்கிருந்த ஃபேரீக்கள், அப்ஸரஸுகள், தேவ கன்னியர்கள் எல்லோரும் "வாவ் வாட் எ பைக்... தி மேன் ஆன் தி பைக் லுக்ஸ் சோ டம்ப்" என்றெல்லாம் பேசிக்கொண்டனர் கிளுகிளுவென்று சிரித்தனர்.

"சந்திரமண்டலத்துக்கொரு ரைட் போலாம் வரியா?" என்று பாடிக்கொண்டே சீட்டியடித்தார் யமன். கன்னியரெல்லாம் "குரலப்பாரு லூசுக்கு" என்று கிசுகிசுத்துக் கலகலத்தனர்.

ஒரு பைக் தேவலோகத்தை இத்தனை ரம்மியமாக்க முடியுமா என்றெல்லாம் தேவர்கள் சிந்திக்கத் துவங்கினர். கொன்றை மலர்களாலும் இரத்தின கற்களாலும் அலங்காரம் செய்யப்பட்ட புஷ்பகவிமானங்கள் தலைகவிழ்ந்தன.

தேவர்கள் கூடி யமனை அடக்குவபவர் இல்லாமல் போய்விட்டதே என்று வருந்திப் புலம்பினர்.

"பெட்டிங்" என்று கூவி "கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போனால்... யமாஹா நம்முது.. எப்பூடி..." என்று குதூகலித்தார் க்யூபிட் குரு.

எல்லோரும் ஒப்புக் கொண்டதும்... நேரே யமனிடம் போய் "ஹாய் ஐயாம் மதன்... மன்மதன்" அப்டீன்னு பீட்டர் வுட்டார்.

யமன் த்ரெடிங் செய்யாத புருவத்தை உயர்த்தி "என்ன வேணும் இப்போ?"

"எங்க கேள்விகளுக்கு பதில் சொன்னால்... நீ அவங்களை எல்லாம் சந்திரமண்டலுத்துக்கு ரைட் அழைத்துப் போகலாம்... இல்லேன்னா... வண்டிய கொடுத்துட்டு ஓடிரு" என்றார் க்யூபிட் குரு.

"கேளு" என்றார் யமன்.

"தூக்கம் எங்கேயிருந்து வருகிறது " என்றதும் அதிர்ச்சியில் உறைந்து போனார் யமன்.

"சரி இது தெர்லயா? அடுத்தது... தமிழில் யதார்த்தவாதம் செத்துவிட்டதென்று அறிவிக்க இவனுங்க யார்?" என்று கேட்டார்.

விக்கித்துப் போன யமன், "நா... நா.. நான் அப்டீல்லாம் கேக்கலியே" என்று திணறினார். "வீட்டில்தான் நிம்மதியில்லை.. இங்கேயுமா" என்று கண்கலங்கினார் யமன்...

"எதிர்கேள்வி கேட்காமல் பதில் சொல்.. இல்லேன்னா யமாஹாவைக் கொடுத்துட்டு ஓடிரு.." என்றார் க்யூ.

யமன் தடுமாறி நின்றார்.

க்யூ தொடர்ந்து "அதெல்லாம் இருக்கட்டும், இதோ இந்த நூற்றுக்கணக்கான மரணங்களை என்னவென்று அர்த்தப்படுத்துவீர்கள்? சொல்லுங்கள், உங்களுக்கான நியாயங்களைத்தான் நாங்களும் கடைபிடிக்க வேண்டுமா? எங்கள் இனத்தை பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற உங்களுடைய கொலைவெறியை நாங்கள் எப்படி மதிப்பது? உங்கள் சௌகர்யங்களுக்காக நாங்கள் உயிர் தியாகம் செய்ய வேண்டுமா?’’ என்று கேட்டார்.

யமன் "அது அது... " என்று திக்கி, திடீரென என்ன கையப்புடிச்சு இழுத்தியா? என்று கேட்டு விட்டு, அப்படியே சல்லென்று சுழன்று அப்பாலிக்கா இருக்கும் ஒரு பிரதேசத்துக்குள் என்ட்ரி கொடுக்கிறார்... நம்ம யமன் ஒரு தமிழ்பட சூப்பர்ஹீரோவாகி ... வெள்ளை சூ போட்டுக் கொண்டு ஜம்ப்புகிறார்.. காஸ்ட்லியான ரேபான் குளிர்கண்ணாடியைக் கூட கழற்றி வைக்க வேண்டும் என்று கவலைப்படாமல் சுற்றி சுற்றி பறக்கிறார். கண்ணாடிக் கூட கழன்று விழவில்லை. புழுதி பறக்கிறது, ஆனால் சூவில் த்துல்ல்..லியூண்டு கூட அழுக்குப் படவில்லை..

புடவைகளினூடாகப் பறந்து வருகிறார். ஓடுகிற ரயிலின் மீது பேலன்ஸ் செய்து நிற்பதுபோல ஜம்மென்று நிற்கிறார். ஆடி மாசம் போலிருக்கிறது. செம காத்து அடிக்கிறது. புடவைகள் பதாகைகள் போலப் பறக்கின்றன. உடல் முழுக்க வண்ணப் புடவைகள் சுற்றிய கோலத்தில் அவரது முகம்கூட நமக்குத் தெரியவில்லை. அடியாள் ஒருவன் அவரை சீண்ட, ஆகாயத்தில் தட்டாமாலை சுற்றி புடவை அவிழ்ந்து பூமியில் வந்து நிற்கிறார்.

யார்ரா இவன், புரூஸ்லியா, ஜெட்லியா ?

யமன் சொல்கிறார், "கில்லிடா!"

சுற்றி இருக்கும் எல்லோரும் பின்னங்கால் பிடனியில் பட ஓடுகிறார்கள்.... இந்த ரகளைக்கெல்லாம் காரணகர்த்தாவான வித்வான் யமாஹா சிவனே என்று ஓரமாய் நின்றிருந்தது.

9 comments:

  1. யமன் சொல்கிறார், "கில்லிடா!"//

    :)) யமன் படும் பாடு பாவம் யமன்.

    ReplyDelete
  2. ஆஹா, நல்ல கற்பனை......வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வலைச்சர ஆசிரியரே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. புது அறிமுகங்களுக்கு நன்றி

    ReplyDelete
  5. "சரி இது தெர்லயா? அடுத்தது... தமிழில் யதார்த்தவாதம் செத்துவிட்டதென்று அறிவிக்க இவனுங்க யார்?" என்று கேட்டார்.


    எமன் மட்டுமில்லீங்க நாங்களும் விக்கித்து தான் நிற்கின்றோம்!!!

    ReplyDelete
  6. கொன்றை மலர்களாலும் இரத்தின கற்களாலும் அலங்காரம் செய்யப்பட்ட புஷ்பகவிமானங்கள் தலைகவிழ்ந்தன.

    ::)))))

    ReplyDelete
  7. அழகாய் கொண்டு போயிருக்கிறீர்கள் லின்க் எல்லாமே நீளமானதாக இருந்ததால் எல்லாவற்றையும் படிக்க இயலவில்லை. ஆனால், நீங்கள் எழுதிய கதை‍விதம் பிடித்திருந்தது. கன்டினியூ!! கங்கிராட்ஸ்!!

    ReplyDelete
  8. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... அறிமுகப் படுத்தி இருக்கும் விதம் - கலக்கல்!

    ReplyDelete
  9. அன்பின் விதூஷ்

    வலைச்சரத்தில் அறிமுகம் புதுமை - அருமை. கொடுத்திருக்குக்கும் சுட்டிகள் அனைத்துமே அருமை.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது