07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 20, 2010

முதலாளிகள் ஒழிக!!!

வீட்டு வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை என்று நான் எழுதினால் பணக்கார மேட்டிமை திமிர் பிடித்த உன் வீட்டில் வேலை செய்யவா ஏழைகள் படைக்கப்பட்டார்கள் என்று யாரேனும் எதிர்வினை ஆற்றும் அபாயம் இருக்கிறது. எனவே வேறு மாதிரியாக சொல்வதென்றால் ஒரு காலத்தில் வீட்டு வேலை செய்து காலம் தள்ளியவர்கள் இப்போது வீட்டு வேலைக்கு செல்வதில்லை. மாறாக அவர்கள் அலுவலகங்களில் ஹவுஸ் கீப்பிங் எனப்படும் அலுவலக பராமரிப்பு பணிகளுக்கு போய்விடுகிறார்கள். யாரோ ஒருவருடைய வீட்டில் எச்சில் பாத்திரம் கழுவுவதை விட அலுவலகங்களில் பராமரிப்பு பணியில் ஈடுபடுவதை அவர்கள் கௌரவமாக கருதுகிறார்கள். வீட்டு வேலை செய்வதில் கிடைக்கும் வருமானத்தை விட இங்கே அதிகமாக சம்பளம் தரப்படுகிறது.

வீட்டு வேலைக்கு ஆள் வைப்பதென்பது எனக்கு கடுகளவும் பிடிக்காத ஒன்று. முடிந்தவரை என் துணிகளை நானே துவைத்துக்கொள்வேன் அல்லது எந்திரத்திடம் சமர்ப்பித்துவிடுவேன். பெரும்பாலானவர்களுக்கு வீட்டு வேலைக்காரிகள் மேல் அதிர்ப்தியே மிஞ்சுகிறது. காரணம் சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பு எடுத்துக்கொள்வதில் தொடங்கி சம்பளம் கடன் வாங்குவது வேலைகளில் பொறுப்பின்மை நம்பகத்தன்மை குறைபாடு என்று ஏராளம்.

என் நண்பர் வீட்டில் ஒரு பெண்மணி வேலை செய்தாள். அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொள்வாள். வேலையும் ஒழுங்காக செய்வதில்லை. மேலும் சம்பளம் குறித்து அடிக்கடி சண்டை போட்டும் வந்தாள். நண்பரும் மனைவியும் வேலைக்கு போவதால் வேலைக்காரியை நிறுத்த முடியவில்லை. ஒரு நாள் ஏதோ ஒரு அல்ப சண்டை பெரிதாகி வாய்ச்சவடாலில் முடிந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் நண்பருக்கு காவல் நிலையத்திலிருந்து அழைப்பு. வேலைக்கார அம்மையாரின் கணவர் ஏதோ இயக்கத்தில் இருக்கிறார் போலும். தன் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாய் என் நண்பன் மீது பொய் புகார் கொடுத்துவிட்டார்கள். புகார் குறித்து நடைப்பெற்ற கட்டப்பஞ்சாயத்தில் இருபதாயிரம் வரை பேரம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போல நிறைய சம்பவங்கள். ஏழைகள், கஷ்டப்படுகிறவர்கள் என்று நாம் கருதும் மேன்மைபொருந்தியவர்களின் அதிகாரம் இப்படி ஓங்குகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் வேலைக்கு ஆள் வைப்பதை தவிர்க்கவே விரும்புகிறார்கள்.

அதே நேரம் அப்பாவியாய் பிழிய பிழிய வேலை வாங்கப்படும் வேலைக்காரிகள் சில சமயம் முதலாளியின் செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளாகி வதை படும் அவலமும் ஆங்காங்கே நடைபெறத்தான் செய்கிறது.

வீட்டு வேலை செய்பவர்களுக்கு சங்கம் இருக்கிறது. அதில் உறுப்பினராய் இருப்பவரை வேலைக்கு அமர்த்தும் போது சங்கத்து விதிகளை மதித்தாக வேண்டும். இல்லையென்றால் என் சங்கத்து ஆளை அடித்தது யார் என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள். ஆனால் உண்மையில் நேர்மையாக உழைத்து தன் குடும்பத்தை காப்பாற்றும் எத்தனையோ தாய்மார்களை நான் அறிவேன். என் வீட்டுக்கு பால் போடும் அம்மாவின் மகன் என்ஜினியரிங் படிக்கிறான். அவர்கள் யார் மீதும் பொய் புகார் கொடுத்து ஏமாற்றி பணம் கரந்து தன் மகனை படிக்க வைக்கவில்லை. அவர்கள் யாரை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை. தன் உழைப்பை மட்டுமே நம்பி தன் அடுத்த தலைமுறையை ஒரு படி மேலே உயர்த்திவிடவேண்டும் என்ற ஒரே முனைப்போடு உழைத்திருக்கிறாள்.சாதித்திருக்கிறாள்.

முன்பெல்லாம் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தவர்கள் இப்போது ஹவுஸ் கீப்பிங் பணிகளுக்கு சென்றுவிடுவதால் வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. படிப்புக்கேற்ப ஊதியமும் பதவியும் உயர்த்தி தரப்படுகிறது. ஞாயமான சம்பளம் பாதகமற்ற ஓர்க் கல்சர் என்று பெண்கள் பலரும் இவ்வேலைக்கு வருகிறார்கள்.

சிலர் எழுதக்கூடும் "பெண்கள் சுதந்திரமாக முதலாளி அம்மாவின் ஆடைகளை துவைத்து காற்றோட்டமாக அக்கம்பக்கத்து வீட்டு கதைகள் பேசியபடி கொடியில் உலர்த்தி மகிழ்வதும் முதலாளியின் கழிப்பறையை இனிமையான திரையிசை பாடலை இசைத்தபடி கழுவிவிட்டுக்கொண்டும் திரிந்த வீட்டு வேலை செய்யும் பெண்கள் இன்று கண்ணாடி கட்டடங்களுக்குள் அமெரிக்க தொழிலதிபர்களுக்கு காபி கொண்டு போய் கொடுக்கும் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள் இரண்டு கையில் டிரேயை தூக்கிக்கொண்டு போகிற போது அமெரிக்க ஏகாதிபத்திய விலங்கு அவர்கள் கைகளை பிணைத்திருக்கிறது. ".

அடுத்து வீட்டுவேலைக்காரிகள் பற்றிய இலக்கியம் வரும். அதிலே அந்த காலத்தில் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தபோது அவர்களின் வாழ்க்கை சுதந்திரமாகவும் சொர்க்கமாகவும் பூந்தோட்டமாகவும் இருந்ததாக எழுதி இப்போது கண்ணாடி கட்டிடங்களுக்கு அவர்கள் சுருண்டுவிட்டதாக அழகிய தமிழில் பிழிய பிழிய வடிக்கப்பட்டு வெளிவரும். நிறைய கற்பனைகள் கொடுக்கும் கரு இது. யாரேனும் தொடங்கலாம்.

அமெரிக்க தொழிற்சாலைகள் வரக்கூடாது புதிய தொழில்கூடங்கள் தமிழ்நாட்டில் துவங்கக்கூடாது ஐ.டி. கம்பெனிகளால் விலைவாசி ஏறுகிறது அதனால் எல்லா ஐ.டி. கம்பெனியையும் இழுத்து மூடு கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவனுக்கு சொந்தமாக கார் இருக்கிறதா உடனடியாக கார் தொழிற்சாலைக்கு சீல் வை என்று ஒவ்வொருவரும் தொழிற்புரட்சிக்கு எதிராக கிளம்புவார்களானால் வேலைக்காரிகள் இன்னும் பணக்காரர்களின் உள்ளாடையை துவைக்கும் கௌரவமான இந்திய முதலீட்டில் இயங்கும் வீட்டு வேலைகளை மட்டுமே செய்துகொண்டிருக்க வேண்டிவரும்.

ஒருவர் என்னிடம் சொன்னார். வெறும் ஆறாயிரம் சம்பளம் கொடுத்துவிட்டு அந்நிய நாட்டு கார் தொழிற்சாலையில் தொழிலாளர்களை கசக்கி பிழிகிறார்களாம். அதன் முதலாளி நம்மை பார்த்து "ஆறாயிரம் ரூபாய்க்கு கூட வக்கில்லாம தானே என் கிட்ட வேலைக்கு வந்த?" என்று கேட்டால் நாம் எங்கே கொண்டு போய் நம் இந்திய திருமுகத்தை வைத்துக்கொள்வோம். எல்லோருக்கும் இந்திய அரசாங்கம் வேலையோ அல்லது அலவன்சோ கொடுக்க முடியுமா?

தொழிலாளர்களின் ஞாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடவேண்டிய நாம் சில சமயம் முதலாளிகளே இருக்கக்கூடாதென்றல்லவா போராடுகிறோம். போபால் விஷவாயு விபத்தில் மிக குறைந்த தண்டனை அதுவும் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டது குறித்து எரிச்சலடைகிறோம். முதலாளிகள் லாபத்தை மட்டுமே தங்களுக்கு வரவாய் வைத்துக்கொண்டு பாதிக்கப்படுபவர்கள் மேல் கருணை காட்டவில்லை என்று கோபப்படுகிறோம். இனி மேல் முதலாளியே இருக்கக்கூடாதென்று போர்க்கொடி தூக்குகிறோம். அடப்பாவமே. உலகிலேயே மட்டமான சேப்டி ஸ்டாண்டர்ட்ஸோடு இயங்கும் ஒரு மாபெரும் திறந்தவெளி தொழிற்சாலை - இந்திய ரயில்வேஸ். எத்தனை விபத்துகள் எத்தனை உயிரிழப்புகள். சொல்லுங்கள். எத்தனை மந்திரிகள் பதவி விலகினார்கள். எத்தனை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்கள். விபத்து, விபத்து தானே என்று இழப்பீடு வழங்கியதும் பிழைப்பை பார்த்துக்கொண்டு போய்விடுகிறோமே ஏன்? அது பொதுத்துறை. உங்களின் ஆசையும் எல்லாம் பொதுத்துறை ஆகிவிடவேண்டும் என்பது தானே. பிறகு ரயில்வே கக்கூஸ் போல் இந்த தேசமே நாற்றமடிக்குமே பறவாயில்லையா?

போபால் விஷவாயு கசிவு ஒரு விபத்து. ஒரு விபத்துக்கு என்ன காரணமாக இருக்க முடியும். அறியாமையினாலோ அஜாக்கிரதையாலோ தான் விபத்து நேரிடும். அதற்கான தண்டனை வழங்கிவிட்டது நீதிமன்றம். ஆனால் அரசாங்கம் அந்நிறுவனத்தை இந்தியாவில் இயங்க அனுமதிக்கும் முன்பே விபத்துக்கான இழப்பீட்டுத்தொகை குறித்து ஆலோசித்து அதிக இழப்பீடு வழங்கினால் தான் இந்தியாவில் தொழில் செய்ய முடியும் என்று அக்ரிமென்ட் போட்டிருப்பார்களேயானால் ஞாயமான இழப்பீடுத் தொகை பெற்றிருக்க முடியும். மற்றபடி முதலாளியை தூக்கில் போடு ஓபாமாவை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரி என்பதெல்லாம் சட்டத்துக்கு முன் செல்லுபடியாகாது.

சட்டத்தையே மாற்றவேண்டும் என்பீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரு வேளை நாளை காரில் சென்றுகொண்டிருக்கும்போது எவனாவது வேண்டுமென்றே குறுக்கே விழுந்து இறந்தால் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தூக்கில் போடுவார்கள். ஞாயம் நீதி நேர்மை வென்றுவிடும்? சமத்துவம் நிலைநாட்டப்படும். சர்வாதிகார சட்டத்தில் தான் அதற்கு சாத்தியமிருக்கிறது என்பது பரிதாபத்துக்குரிய உண்மை.

இன்று ஐ.டி. துறை பெரிய புரட்சி என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறோம். நாம் இங்கே செய்வது என்ன? அமெரிக்காகாரன் தின்ற தட்டை மலிவு விலையில் கழுவி வைக்கிறோம்.

இதை கேள்விப்பட்டவுடன் அவர்கள் "இது என்ன மேட்டிமை அதிகார வர்க்கத்தின் கொடுங்கனவு. அமெரிக்கர்கள் தின்ற தட்டை நாம் மலிவு விலையில் கழுவுவதா? உடனடியாக எல்லா ஐ.டி. கம்பெனி மீதும் கல்லெறிந்து அமெரிக்க நிறுவனங்களை அடித்து நொறுக்குவோம் வாரீர் " என்று போராடக்கூடும். அப்படி போராட முன்வரும் போராளியே இந்தியாவில் கழுவ தட்டே இல்லையே அதை பற்றி என்றேனும் யோசித்தாயா நண்பா?

நாம் அயல் நாட்டுக்கு நம் தட்டுகளை அனுப்பவேண்டாம். குறைந்தபட்சம் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வேலை வழங்கும் அளவிற்கு இந்தியாவில் கழுவ தட்டுகள் இருக்கிறதா?

வீடு கட்டுகிறானே அவனுக்கு சொந்தமாக வீடு இருக்கிறதா?
நெசவு செய்பவனுக்கு உடுத்த துணி இருக்கிறதா நோய்களை குணமாக்கும் டாக்டருக்கு நோயே இல்லையே போன்ற சித்தாந்தங்களை இன்னும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமும் அடிமைத்தனமும் இப்போது நம் நாட்டில் பெரும்பாலும் குறைந்துவிட்டது.

இந்தியாவில் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு தொழில் செய்தால் சராசரியான லாபம் மட்டுமே பெறமுடியும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. ஆனால் முதலாளிகள் கொளுக்கிறார்கள் என்றால் தவறு எங்கே இருக்கிறது? முதலாளிகள் மேல் அல்ல. ரயில்வே டாய்லெட் நாற்றமடிக்க யார் காரணமோ அவர்களே தான் முதலாளிகள் கொளுக்கவும் காரணம்.

அம்பானி வீடு கட்டினால் அவருக்கு எதிராக துப்புவதை விட அவர் வீடு கட்டும் அளவுக்கு பணம் எப்படி சம்பாதித்தார்?நேர்மையாக சம்பாதித்தாரா? குறுக்கு வழியில் சம்பாதிக்கவிட்டது யார்? இனி மேல் இப்படி ஒரு குறுக்கு வழி அம்பாசமுத்திர அம்பானி வராமலிருக்க என்ன செய்யவேண்டும்?காங்கிரஸ் அரசு கவிழ வேண்டுமா? அடபோயா.

முதலாளிகளை எல்லாம் பிச்சைக்காரர்கள் ஆக்கவேண்டும் என்பதும் வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லையென்றால் "முதலாளிகளுக்கு சொம்பு தூக்கும் மன்மோகன் ஆட்சியில் தான் இந்த அவலம்" என்று வெறும் மனிதர்களையே குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு நம் இந்திய ஜனநாயகத்தில் சட்டத்தில் நடைமுறையில் Frameworkல் எங்கே கோட்டை விடுகிறோம் என்பதை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய யாரேனும் போராடுவார்களேயானால் நான் முதல் ஆளாக நின்று அகிம்சை வழியில் கொடி பிடிக்க தயார்.

உண்மையில் வறுமையையும் பிணியும் போக தொழில் முன்னேற்றம் அவசியம். சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அது பெருமளவு களைந்திருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். முதலாளிகளின் சுரண்டலை தடுப்பது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்கும் பட்சத்தில் நம் போராட்டம் ஒளியேற்றும் மெழுகு. இல்லையேல் அதுவே சிதை மூட்டும் கொள்ளி.

அறிமுகங்கள்


பூமி வெப்பமாதல் குறித்து காவேரி கணேசின் பக்கங்கள்


வருடங்களுக்கு கூட தமிழில் பெயர் இருக்கிறது தெரியுமா?


தோழர் உ.ரா.வரதராஜன் மரணம் சொல்லும்....

களவாணித்தனமாய் கல்வி விற்போம்/வாங்குவோம் வாருங்கள்.

எந்திரனும் கோவில்பட்டி முறுக்கும் - கடிக்க முறுமுறுக்க.

கடவுளெனும் தொழிலாளி - சீரியஸ் போலீஸ்.

14 comments:

  1. எனக்குத் தன் சுடு சோறு

    ReplyDelete
  2. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி...

    ReplyDelete
  3. தேர்ந்த அலசல் விசா... keep rocking.

    ReplyDelete
  4. அன்பின் விசா - அறிமுகங்கள் அருமை - அத்தனை சுட்டிகளையும் சென்று பார்த்தேன். நல்வாழ்த்துகள் விசா - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. எதிர்வினைகளையும் நீங்களே யோசித்து அதற்கு விடைகளையும் கொடுத்து விடுகிறீர்களே!

    ReplyDelete
  6. வீட்டுப்பணியாளர்கள் செய்வதெல்லாம் அந்தக் காலத்திலும் இப்படித்தான் இருந்துருக்கு.

    பாரதியின் 'கூலி மிகக் கேட்பார்' நினைவுக்கு வருதே!

    பணியாளர்கள் உதவி இல்லாமல் 22 வருசம் இருந்து இப்போ பணியாளர் இருப்பதால் எனக்கு தினம் ரெண்டு மணி நேரம் வீண்:(

    ReplyDelete
  7. நீங்கள் அறிமுகப்படுத்தும் விதமே வித்தியாசமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. Udal nalamillatha karanaththal valaicharam pakkam varavillai...

    nalla pakirvu...
    nalla arimugangal...

    ReplyDelete
  9. சைவகொத்துப்பரோட்டா said...
    எதிர்வினைகளையும் நீங்களே யோசித்து அதற்கு விடைகளையும் கொடுத்து விடுகிறீர்களே!//

    விவரமான சாமானியன் = விசா

    காலத்துக்கும் கேள்வி கேட்டுக்கினே இருந்தா எப்படி விடையும் சொல்லனுமில்ல ^_^

    ReplyDelete
  10. ஆசிரியரானதுக்கு வாழ்த்துகள்! :)

    தலைப்புலேர்ந்து மேட்டர் எல்லாம் ஒரே டெர்ரரா இருக்கே மொதலாளி .:)

    ReplyDelete
  11. இப்படியெல்லாம் பேசி புரட்சியைத் தாமதப் படுத்திவிட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.அவ்வாறு புரட்சி வெடிக்கும் போது உங்களைப் போன்ற வர்க்கத் துவேஷிகளுக்கு சைபீரியாவில் மூன்றுக்கு மூன்று அளவில் தனிமைச் செல்கள் தயாராக உள்ளன.உங்கள் அறை எண் 311 என்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.சற்று விசாலமான அட்டாச்ச்ட் பாத்ரூம் செல் வேண்டுமெனில் சிவப்புச் சட்டையுடனும் பச்சைத் தாள்களுடனும் [பணம்]கமிசரை தனியே சந்திக்கவும்.

    ReplyDelete
  12. கலக்கல் விசா.

    ReplyDelete
  13. அட நம்ம பேரும் இங்க இருக்கா... நன்றி விசா...
    சிவப்பு கலர்னா ரொம்ப அலர்ஜியோ!!! :-))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது