07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 20, 2008

சுற்றுசூழல் - இனியும் வேண்டாமே அலட்சியம்.


இயற்கை பாதிப்புகளில் முக்கியமானது மண்ணரிப்பு.இதை தடுப்பதில் வெட்டி வேர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. வெட்டிவேரின் மகிமையையும் அதன் பலன்களையும் ரொம்ப விளக்கமா சொல்லி இருக்கார் திரு.வின்செண்ட் அவர்கள்.

இன்று பருவ நிலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் மரங்களின் எண்ணிக்கை குறைந்தது தான். இதனால் சரியான பருவத்தில் மழை பெய்வதில்லை. விவசாயம் பாதிக்கப் படுகிறது. புவி வெப்பம் அதிகரிக்கிறது. ஆகவே மரம் வளர்ப்பதன் அவசியத்தையும் அதற்கு வங்கிகளின் கடனுதவி பற்றியும் திரு.வென்செண்ட் அவர்கள் விளக்கி இருக்கிறார்.

மழைநீர் சேமிப்பு, அதன் பயன் , வீடுகள் மற்றும் வயல்களில் மழைநீர் சேகரிக்கும் முறையை படங்களுடன் அழகாக விளக்கி இருக்கிறார். நீர் மேலாண்மை பற்றி அறிய இங்கு பாருங்கள்.

இப்போது கணிசமான அளவில் சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. சுற்றுசூழல் பாதிப்பு அதன் விளைவுகள் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு பாதுகாப்பு பற்றிய எளிமையான தகவல்களுக்கு இதை பாருங்க.

சுற்றுசூழல் பற்றிய இன்னும் ஏராளமான தகவல்களுக்கும் அதை பற்றிய ஏராளமான புள்ளி விவரங்களுக்கும் அவருடைய "மண் மரம் மழை மனிதன்" என்ற வலைப்பூவை அவசியம் பாருங்க. தவிர்க்க கூடாத வலைப்பூ.

......இப்பத்திக்கு அப்பீட்டு.. :))

16 comments:

  1. //சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.//

    அதை இன்னும் அதிகரிக்க அற்புதமான முயற்சி. வாழ்த்துக்கள் சஞ்சய்! சுட்டிய இடங்களுக்குச் செல்வேன்.

    ReplyDelete
  2. // "மண் மரம் மழை மனிதன்" என்ற வலைப்பூவை அவசியம் பாருங்க. தவிர்க்க கூடாத வலைப்பூ.//

    பார்த்தேன். வெட்டி வேரினால்தான் எத்தனை பயன்கள்? கை வினைப் பொருட்களின் படங்களுடனான பதிவுகளும் அருமை.

    வெயில் காலங்களில் அக்காலத்தில் வாசனைக்காகவும் (மருத்துவ குணத்துக்காக?வும்) வெட்டிவேரை சுத்தமான வெள்ளைத்துணியில் கட்டி மண்பானையில் போட்டு வைத்திருப்பார்கள். இதைத் தாண்டி வேறெதுவும் தெரியாத எனக்கு பல தகவல்களைத் தந்தது வின்சென்ட் அவர்களின் வலைப் பூ.

    ReplyDelete
  3. மரவளம் மிகவும் பரிச்சயமான பதிவு. பயனுள்ள சுட்டிகள்.

    ReplyDelete
  4. சஞ்ஜெய் - ஒரு உருப்படியான வேலை - அருமையான பதிவினிற்கு ஒரு சுட்டி -= மிகவும் பயனுள்ள பதிவு - எத்தனை எத்தனை தகவல்கள் - ம்ம்ம் பொறுமையாகப் படிக்க வேண்டும். மிக மிகப் பயனுள்ள பதிவு

    ReplyDelete
  5. நல்ல சுட்டிகள்...

    செய்ய முடிந்தும் செய்யப்படாமல் இருக்கிற காரியம் மர நடுகை...

    என்னோட பிறந்த நாளுக்கு குறைஞ்சது மூணு மரமாவது நடுறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்...
    (நம்புங்கப்பா..;)

    ReplyDelete
  6. அருமையான பதிவு சஞ்சய். பொறுமையா படிக்கணும். நன்றி.

    ReplyDelete
  7. நிஜமா நல்லவன் said...
    அருமையான பதிவு சஞ்சய். பொறுமையா படிக்கணும்//

    ரிப்பீட்ட்டு

    ReplyDelete
  8. //ராமலக்ஷ்மி said...

    //சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.//

    அதை இன்னும் அதிகரிக்க அற்புதமான முயற்சி. வாழ்த்துக்கள் சஞ்சய்! சுட்டிய இடங்களுக்குச் செல்வேன்.//

    நன்றி லக்ஷ்மியக்கா.. க்ளோபல் வார்மிங், சுற்றுசூழல், பங்கு சந்தை மற்றும் அனைத்து பதிவுகளுக்கும் அழகான பின்னூட்டங்கள் போட்டு உற்சாகப் படுத்தியது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப நன்றி. :)

    ReplyDelete
  9. //மங்களூர் சிவா said...

    மரவளம் மிகவும் பரிச்சயமான பதிவு. பயனுள்ள சுட்டிகள்.//

    நன்றி மாமா.

    ReplyDelete
  10. //cheena (சீனா) said...

    சஞ்ஜெய் - ஒரு உருப்படியான வேலை - அருமையான பதிவினிற்கு ஒரு சுட்டி -= மிகவும் பயனுள்ள பதிவு - எத்தனை எத்தனை தகவல்கள் - ம்ம்ம் பொறுமையாகப் படிக்க வேண்டும். மிக மிகப் பயனுள்ள பதிவு//

    நன்றி சீனா சார்.. குடுத்த வேலையை கொஞ்சமாவது உருப்படியா செஞ்சதா தோனுதா? :P

    ReplyDelete
  11. //வெயில் காலங்களில் அக்காலத்தில் வாசனைக்காகவும் (மருத்துவ குணத்துக்காக?வும்) வெட்டிவேரை சுத்தமான வெள்ளைத்துணியில் கட்டி மண்பானையில் போட்டு வைத்திருப்பார்கள்.//

    நல்ல தகவல்..

    ReplyDelete
  12. //தமிழன்... said...

    நல்ல சுட்டிகள்...

    செய்ய முடிந்தும் செய்யப்படாமல் இருக்கிற காரியம் மர நடுகை...

    என்னோட பிறந்த நாளுக்கு குறைஞ்சது மூணு மரமாவது நடுறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்...
    (நம்புங்கப்பா..;)//

    நல்ல விஷயம்.. வாழ்த்துக்கள் தமிழன்.. மாதம் ஒரு முறை பிறந்தநாள் கொண்டாடுங்கள். :P

    ReplyDelete
  13. //நிஜமா நல்லவன் said...

    அருமையான பதிவு சஞ்சய். பொறுமையா படிக்கணும். நன்றி.//

    நன்றி பாரதி அண்ணே. :)

    ReplyDelete
  14. //புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

    நிஜமா நல்லவன் said...
    அருமையான பதிவு சஞ்சய். பொறுமையா படிக்கணும்//

    ரிப்பீட்ட்டு//

    நன்றி அப்துல்லா சார் :)

    ReplyDelete
  15. Good post! keep up the good work!

    Vincent-ku rendu suzhi na dhaane varum?

    ReplyDelete
  16. திரு.சஞ்சய்.

    முகப்பு படத்தில் நம் கையில் தான் இவைகள் என்று காண்பித்து,
    வெட்டிவேர், மரம், நீர் மேலாண்மை,சுற்றுசூழல் பற்றி மேலும் பலருக்கு தெரியப்படுத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது