07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 23, 2008

கும்மி, எடக்கு, மடக்கு, நக்கல், நையாண்டி, குத்தல், குசும்பல்

நகைச்சுவைப் பதிவுகளைப் பற்றி பேசனும்னா எங்க வேடந்தாங்கல் உறுப்பினர்களைப் பற்றிச் சொன்னாலே போதும் தான். எந்த சந்தர்ப்பமா இருந்தாலும் சும்மா பின்னி பெடல் எடுத்துருவாங்க... இன்னைக்கு கொஞ்சம் நகைச்சுவைப் பதிவர்களைப் பற்றி பார்க்கலாம்.....

அபி அப்பா
நகைச்சுவை என்றாலே அபி அப்பாவின் ஞாபகம் தான் வரும். அபி பாப்பாவின் டிரேட் மார்க் காமெடி பதிவுகள் கலக்கலாக இருக்கும். கவிதை கூட எழுதி இருக்கார். ;) ஆனந்த விகடனில் அபி அப்பா எழுதியது, குரங்கு ராதா கதை, அபி பாரத மாதா, ஐநா சபைக்கு கடிதம், நட்டு சிதம்பரம் போன கதை, எல்லாம் கலக்கலாக இருக்கும். இது தவிர வேடந்தாங்கலிலும் அபி அப்பாவின் கலகலப்பான பதிவுகளைப் பார்க்கலாம்.

குசும்பன்
பெயரிலேயே ஆரம்பமாகி விடும் குசும்பு. கார்ட்டூனில் இவர் போடும் காமெடிகள் அதிகம். அந்த காமெடியை ஆவி சுட்டுப் போட்டது கூட உண்டு. அழகாக கலாய்ப்பதால் பதிவர்களும் இவரிடம் தப்புவதில்லை. டாக்டர் காயத்ரி வீட்டுக்கு போன கதை டாப் டக்கர். இது தவிர அய்யனாரின் பதிவுகளுக்கு எதிர் கலாய்ப்பு பதிவுகளும் ஜூப்பராக இருக்கும்.

கண்மணி டீச்சர்
டீச்சரோடட கொள்கையே அனைவரும் சிரிக்க வேண்டும் என்பது தான். டீச்சரோட டிரேட் அம்புஜம் மாமியின் காமெடிகள், சுப்புரமணி கதைகள் (லொள்! லொள்! டீச்சர் கடிக்க வருது பாருங்க), திருவாளர் திருமதியில் கலந்து கொண்டது எல்லாம் நகைச்சுவையின் உச்ச கட்டங்கள். இது தவிர சிங்கத்தின் குகைக்குள் நுழைந்து சீறியவைகளும் ஜூப்பர்.

நாமக்கல் சிபி
கலாய்த்தலையே கர்மமாகக் கொண்டு பதிவு எழுதும் 'தள'சிபி ஜெகன். தமிழ் மணத்தில் நான் படித்ததிலேயே உச்சபட்ச காமெடி பதிவு இவரது தமிழ்மண வெள்ளை அறிக்கை தான். சில நேரங்களில் நடு இரவில் முழித்து அமர்ந்து இவரால் மட்டும் எப்படி முடியுது என்று யோசித்தது உண்டு. குறுந்தொகையைப் பற்றி எழுதிய இலக்கிய ரசனையும் உண்டு.


ச்சின்னப் பையன்
நான் ரசிக்கும் நகைச்சுவைப் பதிவர்களில் ஒருவர். இவரது பதிவுகளில் இயற்கையான காமெடி அதிகம். இது அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் அசத்துவார். டமாஸ் மாதிரி நகைச்சுவைகளை கொட்டி வைத்திருக்கிறார். 2030 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்ற காமெடிகள் ஓவர்... :))

கடைசியா சில ஒரு இடுகை அறிமுகங்கள்

தம்பியின் ரஸ்னா கதை

காயத்ரியின் பேய்க்கதை

மை பிரண்டின் மொக்கை

பராசக்தி ரீமேக் கொடுமை

3200 கமெண்ட் கண்ட G3 யின் அபூர்வப்பதிவு

1000 பின்னூட்டம் கண்ட அபிஅப்பாவின் நட்சத்திர பதிவு

வெட்டியின் சிறப்பு மொக்கைகள்

குட்டிப்பிசாசின் கம்பங்கூழ்

அம்பியின் காட்டுக் குயில்

துர்கா - அனு வலைப்பதிவர் சந்திப்பு

29 comments:

  1. :) போட்டாச்சுப்பா ஒரு ஸ்மைலி

    ReplyDelete
  2. ஆகா - இவ்வளவும் நகைச்சுவைப் பதிவுகளா - எல்லாம் ஏற்கனவே படித்ததாயிருந்தாலும் மறு படி படிக்க நினைவூட்டியது நன்று - படிச்சுடுவோம்ல

    ReplyDelete
  3. தொகுத்து கொடுத்திருப்பதற்கு நன்றி

    ReplyDelete
  4. //நகைச்சுவைப் பதிவுகளைப் பற்றி பேசனும்னா எங்க வேடந்தாங்கல் உறுப்பினர்களைப் பற்றிச் சொன்னாலே போதும் தான். எந்த சந்தர்ப்பமா இருந்தாலும் சும்மா பின்னி பெடல் எடுத்துருவாங்க...//

    :))

    ReplyDelete
  5. என்ன இது பிரியன் சொல்லி ஆரம்பிக்கணுமின்னு பார்த்தா விக்னேஸ்வரன்னு தட்டு வருது:) பின்னூட்டப் படத்தப் பார்த்தக் கோளாறு.

    அது சரி.நம்ம தருமி ஐயா உங்ககிட்ட "ப்" போடச்சொன்னார்தானே?ஏன் இன்னும் போடல?

    ReplyDelete
  6. நல்ல நகைச்சுவைப் பதிவுகளை தொகுத்ததற்கு நன்றி...

    அதில் என்னோடதையும் குறிப்பிட்டதற்கு டபுள் நன்றி....

    ReplyDelete
  7. ராஜ நடராஜன் -> உங்களுக்காகவே நான் ஒரு 'ப்' போட்டிருக்கேன்.. பாருங்க... அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  8. வகைப்படுத்தி அழகா சொல்லறீங்க. இருங்க எல்லாவற்றையும் ஒரு முறை போயி பார்த்துவிட்டு வருகிறேன்

    ReplyDelete
  9. //ராஜ நடராஜன் -> உங்களுக்காகவே நான் ஒரு 'ப்' போட்டிருக்கேன்.. பாருங்க... அவ்வ்வ்வ்...//

    ச்சின்னப்பையனுக்குத் தெரிந்தது கூட தமிழ்ப்பையனுக்குத் தெரியலயே! சீ...சீ... ஷேம்...சாம்... பப்பி ஷேம்.

    ReplyDelete
  10. /
    //நகைச்சுவைப் பதிவுகளைப் பற்றி பேசனும்னா எங்க வேடந்தாங்கல் உறுப்பினர்களைப் பற்றிச் சொன்னாலே போதும் தான். எந்த சந்தர்ப்பமா இருந்தாலும் சும்மா பின்னி பெடல் எடுத்துருவாங்க...//

    :)))

    ReplyDelete
  11. /
    //நகைச்சுவைப் பதிவுகளைப் பற்றி பேசனும்னா எங்க வேடந்தாங்கல் உறுப்பினர்களைப் பற்றிச் சொன்னாலே போதும் தான். எந்த சந்தர்ப்பமா இருந்தாலும் சும்மா பின்னி பெடல் எடுத்துருவாங்க...//
    ///

    ரிப்பீட்டு...! :))

    இதுக்கு நான் வெளிய இருந்து ஆதரவு ...!

    ReplyDelete
  12. நான் பெரும்பாலும் படிக்கிறது நகைச்சுவை பதிவுகள்தான், நன்றி தமிழ் பிரியன் தொகுப்புக்கும் பகிர்வுக்கும்...

    ReplyDelete
  13. ///VIKNESHWARAN said...

    :) போட்டாச்சுப்பா ஒரு ஸ்மைலி///
    நன்றி விக்கி!

    ReplyDelete
  14. ///cheena (சீனா) said...

    ஆகா - இவ்வளவும் நகைச்சுவைப் பதிவுகளா - எல்லாம் ஏற்கனவே படித்ததாயிருந்தாலும் மறு படி படிக்க நினைவூட்டியது நன்று - படிச்சுடுவோம்ல///
    நகைச்சுவை எப்ப, எத்தனை தடவை வேண்டுமானாலும் படிக்கலாம்ல

    ReplyDelete
  15. ///VIKNESHWARAN said...

    தொகுத்து கொடுத்திருப்பதற்கு நன்றி///
    நன்றி விக்கி!

    ReplyDelete
  16. ///SanJai said...

    //நகைச்சுவைப் பதிவுகளைப் பற்றி பேசனும்னா எங்க வேடந்தாங்கல் உறுப்பினர்களைப் பற்றிச் சொன்னாலே போதும் தான். எந்த சந்தர்ப்பமா இருந்தாலும் சும்மா பின்னி பெடல் எடுத்துருவாங்க...//

    :))///
    :))))))))

    ReplyDelete
  17. ///ராஜ நடராஜன் said...

    என்ன இது பிரியன் சொல்லி ஆரம்பிக்கணுமின்னு பார்த்தா விக்னேஸ்வரன்னு தட்டு வருது:) பின்னூட்டப் படத்தப் பார்த்தக் கோளாறு.

    அது சரி.நம்ம தருமி ஐயா உங்ககிட்ட "ப்" போடச்சொன்னார்தானே?ஏன் இன்னும் போடல?///
    உங்களால மட்டும் எப்படி இது முடியுது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  18. ///ச்சின்னப் பையன் said...

    நல்ல நகைச்சுவைப் பதிவுகளை தொகுத்ததற்கு நன்றி...

    அதில் என்னோடதையும் குறிப்பிட்டதற்கு டபுள் நன்றி....///
    இன்னும் நல்லா கலக்குங்க சொல்லித் தான்... :))

    ReplyDelete
  19. ///ச்சின்னப் பையன் said...

    ராஜ நடராஜன் -> உங்களுக்காகவே நான் ஒரு 'ப்' போட்டிருக்கேன்.. பாருங்க... அவ்வ்வ்வ்...///
    மாட்டி விடாதீங்க சத்யா!

    ReplyDelete
  20. ///மது... said...

    வகைப்படுத்தி அழகா சொல்லறீங்க. இருங்க எல்லாவற்றையும் ஒரு முறை போயி பார்த்துவிட்டு வருகிறேன்///
    பாசமலரே! பாத்துட்டு திரும்பி வந்த மாதிரி தெரியலையே?>>... ;)

    ReplyDelete
  21. ///மங்களூர் சிவா said...

    /
    //நகைச்சுவைப் பதிவுகளைப் பற்றி பேசனும்னா எங்க வேடந்தாங்கல் உறுப்பினர்களைப் பற்றிச் சொன்னாலே போதும் தான். எந்த சந்தர்ப்பமா இருந்தாலும் சும்மா பின்னி பெடல் எடுத்துருவாங்க...//

    :)))///
    :)))))

    ReplyDelete
  22. ///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

    :)))))///
    /:)))))))))))

    ReplyDelete
  23. ///நிஜமா நல்லவன் said...

    :) ///
    யோவ்! பெரிய நரசிம்மராவா? வாய் விட்டு சிரிய்யா.. ;))))))))))

    ReplyDelete
  24. ///தமிழன்... said...

    :))///
    :)))))

    ReplyDelete
  25. /// தமிழன்... said...

    நான் பெரும்பாலும் படிக்கிறது நகைச்சுவை பதிவுகள்தான், நன்றி தமிழ் பிரியன் தொகுப்புக்கும் பகிர்வுக்கும்...///
    நன்றி தமிழன்... :)

    ReplyDelete
  26. நகைச்சுவைப்பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி :)

    ReplyDelete
  27. ///கயல்விழி said...

    நகைச்சுவைப்பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி :)///
    மிக்க நன்றி கயல்விழி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது